முந்தய பக்கம்

விவசாய நிலத்திற்குள் புகுந்து மஞ்சளை சேதப்படுத்திய பன்றிகள்

16 Jul 2026, 10:17 pm
விவசாய நிலத்திற்குள் புகுந்து மஞ்சளை சேதப்படுத்திய பன்றிகள்
<p><strong>விவசாய நிலத்திற்குள் புகுந்து மஞ்சளை சேதப்படுத்திய பன்றிகள்</strong></p><p>நாமக்கல், ஜூலை 16- ராசிபுரம் அருகே நள்ளிரவில் விவசாய நிலங்க ளுக்குள் காட்டுப் பன்றிகள் கும்பலாக புகுந்து, 3 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் மற்றும் சின்ன வெங் காயப் பயிர்களை சேதப்படுத்தியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மெட்டாலா அருகே உள்ள உரம்பு கிராமம் பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் (60). இவ ரது குடும்பத்திற்கு சொந்தமான 25 ஏக்கர் பரப் பளவில் மரவள்ளி, மஞ்சள் மற்றும் சின்ன வெங்காய பயிர்களை நடவு செய்து பராமரித்து வந்தார். இந்நிலையில், புதனன்று இரவு பாலசுப்பிரமணி யத்தின் விவசாயத் தோட்டத்திற்குள் கும்பலாக புகுந்த காட்டுப்பன்றிகள், மஞ்சள் மற்றும் சின்ன வெங்காயப்பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப் படுகிறது. இதன் காரணமாக சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் வெங்காயப் பயிர்கள் முற்றிலும் சேதமாகின. இதனி டையே சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி பாலசுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram