பலாப் பழ சீசன் தொடங்கியதால் ஊருக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு விவசாயிகள், பொது மக்கள் அச்சம்
22 Jul 2026, 10:15 pm
<p><strong>பலாப் பழ சீசன் தொடங்கியதால் ஊருக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு விவசாயிகள், பொது மக்கள் அச்சம்</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 22 - குமரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் துவங்கியதால் அந்த பழத்தை உண்பதற் காக காட்டு யானைகள் ஊருக்குள் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயி கள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட் டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பேணு அருகே வட்டப்பாறை, தேக்கு தோட்டம் பகுதியில் 3 காட்டு யானைகள் இறங்கி தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை அடித்து நாசம் செய்துள்ளன. வண்ணாத்திப்பாறை மேல்பகுதியில் ஒற்றை காட்டு யானை ரப்பர் தோட்டத்தை பாது காக்க போடப்பட்டிருந்த மின் வேலியை உடைத்து நொறுக்கியது. தடிக்காரகோணம் உள்பகுதியில் காட்டு யானை இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வனத்துறையிடம் பொது மக்கள் புகார் அளித்ததில் பலாப்பழத்திற்காக யானைகள் இங்கு படையெடுக்கின்றன. பலாப் பழ சீசன் முடிந்தவுடன் யானை கள் மீண்டும் காட்டுக்குள் திரும்பி செல்லும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். விவசாயிகள் இரவு நேரங்களில் தனி யாக வெளியே செல்ல வேண்டாம் எனவும், யானைகள் தென்பட்டால் உடனே வனத்து றைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி யுள்ளனர்.</p>
