வேலிகளை உடைத்து விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்: விவசாயிகள் அதிர்ச்சி!
12 hours before

வேலிகளை உடைத்து விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்: விவசாயிகள் அதிர்ச்சி!

மே.பாளையம், செப்.19-சிறுமுகை அருகேயுள்ள வச்சினம்பாளையம் கிராமத்தில் வெள்ளியன்று நள்ளிரவு புகுந்த 6 காட்டு யானைகள் கொண்ட கூட்டம், விவசாயத் தோட்டங்களை வெள்ளியன்று இரவு சூறையாடியது.

வேலிகளை உடைத்து சென்ற யானைகள் தென்னை,

பாக்கு, வாழை மரங்களை அடியோடு முறித்துப் போட்டதுடன், அப்பகுதியிலிருந்த 3 மின் கம்பங்களையும் சாய்த்துச் சென்றுள்ளன. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.

ஒற்றை யானையாக சுற்றித்திரிந்த பாகுபலி என பொதுமக்கள் பெயரிட்ட யானை, தற்போது 5 யானைகளுடன் இணைந்துள்ளது. யானை கூட்டத்தை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.