தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள் அறுவடைக்கு தயாரான வாழைகள் சேதம்

1 hour before
விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள் அறுவடைக்கு தயாரான வாழைகள் சேதம்

விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள் அறுவடைக்கு தயாரான வாழைகள் சேதம்

கோவை, அக்.8-கோவை மாவட்டம், ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல் கிராமத்தில் தொடர்ச்சியாக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நல்லூர்வயல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுவது தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில், புதனன்று இரவு அப்பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள், விவசாயி விஜயகுமார் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த ஏராளமான வாழை மரங்களை சேதப்படுத்தின.

தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் யானைகள் புகுந்த காட்சிகள் பதிவாகின. உடனடியாக இக்காட்சிகளை வனத்துறையினருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி தகவல் தெரிவித்தும், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு மிகவும் தாமதமாக வந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

யானைகள் வாழைகளை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது அப்பகுதி வாட்ஸ்அப் குழுக்களில் வெளியாகி வருகிறது. எனவே, விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுவதைத் தடுக்க வனத்துறையினர் உடனடியாக நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.