பாபநாசம் அருகே காட்டுப்பன்றிகளால் அறுவடைக்கு தயாரான கரும்புகள் நாசம்
25 minutes before

பாபநாசம் அருகே காட்டுப்பன்றிகளால் அறுவடைக்கு தயாரான கரும்புகள் நாசம் - இழப்பீடு வழங்கக் கோரிக்கை

திருநெல்வேலி, நவ.25– நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அனவன் குடியிருப்பு பகுதியில் திங்கட்கிழமையன்று காட்டுப்பன்றிகள் தோட்டத்தில் புகுந்து கரும்புகளை சேதப்படுத்தியது.

இப்பகுதியை சேர்ந்த விவசாயிகளான மாரியம்மாள்-மாரியப்பன் ஆகியோர் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குத்தகை செலுத்தி கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். ஜனவரி மாதம் பொங்கலுக்காக கரும்புகள் அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து கரும்புகளை கடித்து நாசம் செய்தன.

ஏற்கனவே இவர்களது கன்றுக்குட்டியை சிறுத்தை ஒன்று கடித்துக்கொன்றது. அப்போது வனத்துறை அதிகாரிகள் வந்து புகைப்படம் எடுத்து, எழுதி வாங்கிச் சென்றனர். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட இழப்பீடு வழங்கவில்லை என்று வேதனையுடன் கூறினர்.

தற்போது காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்திற்கு வனத்துறை அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்குவதுடன், காட்டுப்பன்றிகளை பிடிக்க வயலில் கூண்டு வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.