விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்
1 Dec 2025, 5:20 pm
<p><strong>விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்</strong></p>
<p>உடுமலை, டிச.1- விவசாயிகளின் பயத்தை போக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள் ளது. மலைப்பகுதியில் இருந்து காட்டு விலங் குகள் உணவு மற்றும் குடிநீர் தேவைகளு க்காக மலை அடிவாரப்பகுதியில் இருக்கும் விளைநிலங்களில் முகாமிட்டு வருகின்றன. மேலும், காட்டு யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் தென்னை மரங்களையும், விளை பயிர்களையும் சேதப்படுத்தி வந்தன. கடந்த சில ஆண்டுகளாக மலை அடிவாரப்பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் உள்ள விளை நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் உடுமலை நகரப் பகுதியின் எல் லையில் இருக்கும் ராகல்பாவி கிராமத்தில், விவசாய நிலத்தில் பயிர் செய்த மக்காச் சோள பயிர்களை 50க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி உள்ளன. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுப் பன்றிகள் விளைநிலங்களை சேதப்படுத்து வதை தடுக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். வனவிலங்குகள் ஏற்படுத்தும் சேதங்களுக்கு உரிய நேரத்தில் முழு நிவார ணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை போல் காட்டுப்பன்றிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வனத்துறையி னர் தீவிரம் காட்ட வேண்டும். மேலும் காட்டு பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக் கவும், மலைப்பகுதியில் இருந்து விலங்கு கள் வெளியே வர முடியாத வகையில் மலை யடிவாரப்பகுதியில் தடுப்பு வேலி அல்லது அகழிகள் அமைக்க வேண்டும். வன விலங்கு களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விளைபயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.</p>
