காட்டுப்பன்றிகளால் தொல்லை
9 Nov 2025, 2:37 pm
<p><strong>காட்டுப்பன்றிகளால் தொல்லை</strong></p>
<p>பொள்ளாச்சி, நவ.9- பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு மக்காச்சோள பயிர்கள் நல்ல விளைச்சல் இருக்கிறது. ஆனால் காட்டுப்பன்றிகள் தொல்லையால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைகளில் இந்த ஆண்டு போதிய மழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஆழியார் உள்ளிட்ட அணைகள் நிரம்பி விவசாய நிலங்களுக்கு கூடுதலாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பொள்ளாச்சி பகுதிக ளில் விளை நிலங்களில் காய்கறிக்கு அடுத்து மக்காச்சோளப் பயிரிடபட்டு, தற்போது பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். ஆனால், மறுபுறத்தில் காட்டுப்பன்றிகள், மக்காச் சோளப் பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயி கள் அதிருப்தி அடைந்துள்ளனர். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு, வனத்துறை உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி னர்.</p>
