அமெரிக்க அழுத்தத்திற்கு மோடி அரசு அடிபணிவதா?
29 Jan 2026, 5:39 pm
<p><strong>அமெரிக்க அழுத்தத்திற்கு மோடி அரசு அடிபணிவதா? </strong></p>
<p><br />
போர்ட் பிளேர்(அந்தமான்), ஜன. 28 - அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து ரஷ்யாவிடமிருந்து எண்ணை வாங்குவதை இந்தியா தவிர்த்தால், நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை மேலும் கடுமையாக உயரும் என சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். ஜனவரி 24 அன்று மாலை மத்திய அந்தமானின் ரங்கத் பஜார் பகுதி யில் சிபிஐ(எம்) மத்திய அந்தமான் இடைக்குழு சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றினார். அந்தமான் மாநில அமைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தீவுகளுக்கு வருகை தந்த கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: அமெரிக்க ஆதிக்கமும் தமிழக பாதிப்பும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சிறிய நாடுகளை அச்சு றுத்தி வருகிறார். தற்போது இந்தியா போன்ற நாடுகளையும் ரஷ்யாவிட மிருந்து எண்ணை வாங்கக்கூடாது என மிரட்டத் தொடங்கியுள்ளார். இதற்கு மோடி அரசு அடிபணிவது இந்தியப் பொரு ளாதாரத்தை சீர்குலைக்கும். அமெரிக்கா விதித்துள்ள நியாயமற்ற இறக்குமதி வரி விதிப்பால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆடை உற்பத்தித் தொழில்கள் முடங்கி, பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்கள் வேலை இழந் துள்ளனர். விலைவாசி உயர்வும் திட்டங்கள் முடக்கமும் 2014இல் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் கடந்த 12 ஆண்டு களில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத வகை யில் உயர்ந்துள்ளன. கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGA) சீர்குலைத்துவிட்டு, 125 நாட்கள் வேலை என ‘வி பி ஜி ராம் ஜி’ என்ற புதிய மோசடித் திட்டத்தை அரசு அறி வித்துள்ளது. தற்போதைய 100 நாள் வேலையையே வழங்க முடியாத மோடி அரசால் 125 நாள் வேலையை எப்படி வழங்க முடியும்? இது கிராமப்புற வறு மையை மேலும் அதிகரிக்கும். தொழிலாளர் விரோதப்போக்கு நூற்றாண்டு காலமாக தொழிலாளர் கள் போராடிப் பெற்ற உரிமைகளை நான்கு ‘தொழிலாளர் சட்டத் தொகுப்பு கள்’ (Labour Codes) மூலம் இந்த அரசு பறித்து வருகிறது. இது தொழிலாளர் வர்க்கத்தின் மீது திணிக்கப்படும் ஒரு நவீன அடிமைத்தனம். இதற்கு எதிராக வரும் பிப்ரவரி 12 அன்று நடை பெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் அந்தமான் தொழிலாளர் கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். மேலும், அந்தமான் தீவுகளில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தும், புதுச்சேரி மாடலில் அந்தமானுக்கு சட்டப்பேரவை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கையும் அவர் கடுமையாக விமர்சித்தார். தலைவர்கள் பங்கேற்பு கட்சியின் மாநில அமைப்புக் குழுச் செயலாளர் டி. அய்யப்பன் உரையாற்று கையில், தீவு மக்களின் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் குறித்துப் பேசினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.கே. சர்க்கார், மாநிலக் குழு உறுப்பினர் ராகுல் மிருதா, மத்திய அந்தமான் இடைக் குழுச் செயலாளர் எஸ்.ஆர். மிருதா ஆகி யோர் உரையாற்றினர். மாநிலச் செயற் குழு உறுப்பினர் பி.கே. காலித் முன்னி லை வகித்தார். இக்கூட்டத்திற்கு எம். புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.</p>
