தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட ஓவியரின் மனைவிக்கு அரசு வேலை

17 Feb 2026, 3:36 pm
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட ஓவியரின் மனைவிக்கு அரசு வேலை
<p><strong>பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட ஓவியரின் மனைவிக்கு அரசு வேலை</strong></p> <p>உதகை, பிப்.17- பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட மறைந்த பழங்குடியின ஓவியரின் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை நீலகிரி மாவட்ட ஆட்சி யர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கி னார். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆலு குரும்பர் பழங்குடியின சமூ கத்தை சேர்ந்த மறைந்த ஓவியக் கலைஞர் ஆர்.கிருஷ்ணன் (கிட்னா) &nbsp;அவர்களுக்கு, 2026 ஆம் ஆண்டு குடி யரசு தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. பாறை ஓவியப் பாணியில், இயற்கை சாயங் களை கொண்டு துணிகளில் ஓவியம் வரைவதில் புகழ்பெற்ற இவர், 30 &nbsp;ஆண்டுகளாக அழிந்து வரும் குரும்பா கலை வடிவத்தை மீட்டெ டுத்துப் பிரபலப்படுத்தினார். இந் நிலையில், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டாலும் ஆர்.கிருஷ்ணனின் குடும் பம் மிகவும் வறுமையில் உள்ளது குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து மறைந்த ஓவியர் கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு தேவையான உத விகள் மற்றும் அடிப்படை வசதிகளை &nbsp;செய்துதர தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பேரில், கிருஷ்ணனின் மனைவி சுசீலாவுக்கு, நீலகிரி மாவட்டம், உதகை அருகே முத்தோரை பாலா டாவில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பழங்குடியினா் மாதிரிப் பள்ளியில் அரசுப்பணி வழங்க நீல கிரி மாவட்ட நிர்வாகம் சாா்பில் நடவ டிக்கை எடுக்கப்பட்டது. உதகை பிங் கர்போஸ்ட் பகுதியிலுள்ள கூடுதல் &nbsp;ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று நடைபெற்ற நிகழ்வில், ஆர்.கிருஷ்ணனின் மனைவி சுசீலாவுக்கு நிரந்தர தோட்டப் பணியாளர் பணிக் கான ஆணையை மாவட்ட ஆட்சியர் &nbsp;லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கி னார். இதில் மாவட்ட வருவாய் அலுவ லர் நாராயணன், மாவட்ட ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினா் நல அலு வலர் பீட்டர் ஞானராஜ் உட்பட பலர் &nbsp;கலந்து கொண்டனர். மேலும், இவருக்கு பள்ளி வளா கத்திலேயே அரசு குடியிருப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற் கெனவே மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் இவரது மூத்த மகள் வாசுகிக்கு உதகை ஜேஎஸ்எஸ் பார் மஸி கல்லூரியில் விடுதி வசதியுடன் &nbsp;டி.பார்ம் படிக்க கட்டணமில்லாமல் கல்வி சேர்க்கை அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அவர் முனைவர் பட்டம் &nbsp;பெறும் வரை கட்டணமில்லா கல்வி &nbsp;கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல கிருஷ்ணன், சுசீலா தம்பதி மகன் ராகுல், மகள்கள் கீதா, &nbsp;கீர்த்திகா ஆகியோர் அரசுப் பள்ளி யில் படித்து வரும் நிலையில், தற் போது மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி யால் விடுதி வசதியுடன் ஏகலைவா மாதிரி பள்ளியில் கல்வியை தொடர &nbsp;அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.