தகவல் பெயர்ப்பர் மீது மனைவி புகார்
11 Apr 2026, 5:30 am

தகவல் பெயர்ப்பர் மீது மனைவி புகார்

சென்னை, ஏப்.10 - சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் மீது அவரது மனைவி மீனாட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொருளாளரான ஜெகதீச பாண்டியனுக்கும் மீனாட்சிக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யோகவர்ஷினி என்ற ஒன்பது வயது மகள் உள்ளார். கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றம் சேர்ந்து வாழ்வது உத்தரவிட்டது என்று மீனாட்சி புகாரில் தெரிவித்துள்ளார்.

தனது குழந்தையை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று பல்லாவரத்தில் உள்ள விடுதி ஒன்றில் அடைத்து வைத்திருப்பதாகவும், குழந்தையை ஒப்படைக்காமல் மிரட்டுவதாகவும் மீனாட்சி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், கணவரிடமிருந்து குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தை நாடியுள்ளார்.