தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆர்எஸ்எஸ் பொது ஆய்வுக்கு அஞ்சுவது ஏன்? - சவேரா

9 Jul 2026, 9:19 pm
ஆர்எஸ்எஸ் பொது ஆய்வுக்கு அஞ்சுவது ஏன்? - சவேரா

ஆர்எஸ்எஸ் பொது ஆய்வுக்கு அஞ்சுவது ஏன்? - சவேரா

கடந்த ஜூன் 13 அன்று, கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் அந்த அமைப்பின் சட்டப்பூர்வ நிலை, பதிவு விவரங்கள், நிர்வாகிகள், நிதி ஆதாரம், செலவுகள், வரிவிதிப்பு மற்றும் பொது நிகழ்ச்சி களுக்கான அனுமதிகள் ஆகியவற்றை வெளிப் படுத்துமாறு அவர் கோரியிருந்தார்.

இதற்கு இரண்டு விசித்திரமான பதில்கள் வந்தன. முதலாவது பதில் மோகன் பகவத்திடமிருந்தே வந்தது. அந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மோகன் பகவத் கூறியபோதே, “இந்து தர்மம் பதிவு செய்யப்பட வில்லை; பல விஷயங்கள் பதிவு செய்யப்படுவ தில்லை” என்றும், சங் பரிவார் அமைப்பு இருப்பதை அரசு நன்கு அறியும் என்றும் கூறினார். அரசிடமி ருந்து நிதி பெற விரும்பும் அமைப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறுவதன் மூலம் அவர் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயன்றார். மோகன் பகவத் தனது மனதளவில் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒட்டுமொத்த இந்து சமூகத்துடன் சமமாகக் கருதுவதோடு, தங்களை இந்துக்களின் ஒரே பிரதிநிதியாகவும் எண்ணுகிறார். ஆனால், அந்த அமைப்பின் வரவு-செலவு கணக்குகள், சட்டப்பூர்வ நிலை அல்லது அதன் செயல்பாட்டு முறையை வெளிப்படுத்துவதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

இதற்கிடையில் வந்த மற்றொரு விசித்திரமான பதில், கர்நாடகாவின் பிஜப்பூர் தொகுதியிலிருந்து ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெ டுக்கப்பட்ட பாஜகவின் ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி யிடமிருந்து வந்தது. செய்தியாளர்கள் அவரிடம் இக்கடிதம் குறித்துக் கேட்டபோது, “ஒரு தலித் நபர் ஏன் ஆர்எஸ்எஸ் விவகாரங்களில் தலையிட வேண்டும்? அமைதியாகவும் நிம்மதியாகவும் இருங்கள்” என்று பதிலளித்தார். கார்கேவும் ஜிகஜினகியும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே. மேலும் “ஆர்எஸ்எஸ்- உடன் மோதலில் ஈடுபடுபவர்கள் யாரும் நிலைத்து நிற்க முடியாது” என்றும் மோகன் பகவத் மிரட்டி யுள்ளார். இது பாஜக தலைவர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தான்; இதை ஒரு மூத்த பாஜக தலை வரே ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் உள் செயல்பாடுகள் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்த கேள்விகள் ஒன்றும் புதியவை அல்ல. மகாத்மா காந்தியின் படுகொலை நடந்த காலத்திலிருந்தே, இது ஒரு நிழல் போன்ற, ரகசியத்தன்மை கொண்ட அமைப்பு என்பதை மக்கள் உணர்ந்து வந்துள்ளனர். துணை ராணுவப் பாணியிலான பயிற்சிகள், அணிவகுப்புகள் மற்றும் வன்முறை வரை செல்லக்கூடிய தீவிரவாதச் செயல்பாடுகளில் திரைக்குப் பின்னால் ஈடுபடுவது இதன் அடையாளங்களாகும். 1978இல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) உத்தரவு ஒன்றின் மூலம் இவ்வமைப்புக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதன் நிதி என்பது ‘குரு தட்சிணை’ (ஆசிரியருக்கு வழங்கப்படும் காணிக்கை) என்றும், ‘பரஸ்பரத் தன்மை’ (mutuality) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அது வரிக்கு உட்பட்டதல்ல என்றும் கூறி ஆர்எஸ்எஸ் தப்பித்து வருகிறது. ஆனால், அது ஓரங்கட்டப்பட்ட நிலையில் இயங்கிவந்த அந்த நாட்களிலிருந்த சூழல் இப்போது முற்றிலும் மாறியுள்ளது.

அரசியலற்ற கலாச்சார அமைப்பு என்ற ஏமாற்று வேலை

ஆர்எஸ்எஸ் குறித்துத் தொடர்ந்து முன்வைக் கப்படும் கட்டுக்கதைகளில் ஒன்று, அது அரசியல் அற்ற ஒரு கலாச்சார அமைப்பு என்பதுதான். மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்காக, சர்தார் படேலின் வலியுறுத்தலின் பேரில் அவசரமாக உரு வாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ்-இன் அமைப்புச் சட்டத்தில் அவ்வாறே எழுதப்பட்டது. ஆர்எஸ்எஸ் நேரடி யாகத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்பது உண்மைதான், ஆனால் அரசியல் என்பது வெறும் தேர்தல்கள் மட்டுமல்ல.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் எண்ணற்ற துணை அமைப்புகள், பிற்போக்குத்தனமான கருத்துக்க ளைக் கொண்ட மனுஸ்மிருதி போன்ற நூல்களால் நிர்வகிக்கப்படும் ஓர் ‘இந்து ராஷ்டிர’த்தை உரு வாக்கவே இயங்குகின்றன. பிராமணியக் கோட்பாடு களை அடிப்படையாகக் கொண்ட ‘இந்துத்துவா’ விளக்கத்தைப் பின்பற்றாத இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரான விரோதப் போக்கை அது தீவிரமாகப் பரப்புகிறது. மக்களின் ‘குண நலன்களை வடிவமைப்பதன்’ (character building) மூலமே இது சாத்தியம் என்று ஆர்எஸ்எஸ் கூறினா லும், ஒரு நூற்றாண்டு காலமாக அதற்கான குறிப்பி டத்தக்க பலன்கள் எதுவும் வெளிப்படவில்லை. மாறாக, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவே அது முயல்கிறது. அரசியல் களத்தில் பணியாற்ற, அது முதலில் 1950இல் ‘பாரதிய ஜன சங்க’த்தை நிறுவியது. பின்னர், 1980இல் ஜன சங்கம் ‘பாரதிய ஜனதா கட்சி’யாக (BJP) மாற்றப்பட்டது.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டுச் சூழலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் பிரச்சா ரகர்களும் (முழுநேர ஊழியர்கள்) முக்கிய உறுப்பி னர்களும் அரசாங்கத்தின் உயரிய பதவிகளை வகிக்கத் தொடங்கினர். பிரதமரே ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தவர் தான். பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் அமைச்சர்க ளும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களே. ஆர்எஸ்எஸ், பொருளாதாரம், கல்வி போன்ற பல்வேறு ஒருங்கிணைப்புக் குழுக்கள் வாயிலாக அரசுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதிலும் அவற்றைச் செயல்படுத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பதிலுக்கு, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இந்த அமைப்புகளின் செயல் பாடுகளுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து பெருமளவில் நிதியுதவி அளித்து வருகின்றன. எனவே, ஆர்எஸ்எஸ் பொது அரசியல் களத்தில் செயல்படும்போது, அதன் உள் செயல்பாடுகள் ஏன் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படக் கூடாது?

அரசு நிறுவனங்களுக்குள் ஊடுருவல்

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கான தடையை மோடி அரசு நீக்கியதைத் தொடர்ந்து, அரசு மற்றும் சமூகத்தின் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்க ளுக்குள்ளும் ஆர்எஸ்எஸ் ரகசியமாகவும் திட்டமிட்ட படியும் ஊடுருவியுள்ளது. நீதித்துறையில் பணி யாற்றும் நீதிபதிகள் முதல் பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் வரையிலும், தொழில்துறைத் தலை வர்கள் முதல் ஆயுதப் படைகள் வரையிலும் பலரும் தாங்கள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் அனை வரும் ஒன்றிணைந்து, மக்களின் சிந்தனையை வடிவ மைப்பதிலும் கொள்கைகளைத் தீர்மானிப்பதிலும் கற்பனை செய்ய முடியாத அளவிலான அதிகா ரத்தையும் செல்வாக்கையும் செலுத்துகின்றனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் (ஆயுதப் படைக ளில் சேருவதற்கான பயிற்சியளிக்கும் சைனிக் பள்ளிகள் உட்பட) நடத்தப்படுகின்றன. லட்சக்க ணக்கான மக்களைச் சென்றடையும் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் சமூக சேவை அமைப்புகளையும், கோவில்களை நிர்வகிக்கும் மத அறக்கட்டளைகளையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இவ்வளவு பெரிய அதிகாரத்தைக் கொண்ட ஓர் அமைப்பு, கட்டாயம் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப் படைத்தன்மைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அயோத்தி ராமர் கோவில் நிதியிலிருந்து தினசரி ாணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டவர்க ளால் சுமார் 200 கோடி ரூபாய் வரை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் இதற்கு ஒரு முக்கிய உதாரணம். அக்கோவிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையில் ‘சங் பரிவார்’ அமைப்பைச் சேர்ந்தவர்களே பெருமளவில் இடம்பெற்றுள்ளதால், இது தொடர்பாக இதுவரை எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை.

பொதுமக்களின் விழிப்புணர்வு அவசியம்

நாட்டைத் திரைக்குப் பின்னாலிருந்து இயக்கி, அதன் தலைவர்களைக் கைப்பாவைகளைப் போலக் கையாளும் ஒரு ‘மறைமுக அதிகார மையமாக’ ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. தனது இடைக் கால சித்தாந்தத்திற்கும் ‘இந்து ராஷ்ட்ரம்’ குறித்த கனவுகளுக்கும் மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவதற்காக வெளிப்படையாகக் களமிறங்கும் துணிச்சல் அதற்கு இன்னும் வரவில்லை. அது சரியான தருணத்திற்காகக் காத்துக்கொண்டு, பாஜக போன்ற அமைப்புகளின் பின்னால் தன்னை மறைத் துக்கொண்டு செயல்படுகிறது.

இறுதியில், கடந்த கால முயற்சிகளைப் போலவே கார்கேவின் கடிதத்தையும் ஆர்எஸ்எஸ் புறக்க ணிக்கக்கூடும். இந்தியாவை ஆர்எஸ்எஸ் ரகசி யமாகக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்கான உண்மை யான அரண், மக்களின் விழிப்புணர்வும் அவர்கள் செலுத்தும் அழுத்தமுமே ஆகும். அதன் செயல்பா டுகள், அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் அரசு நிர்வாகத்தில் அவை ஊடுருவி யுள்ள விதம் ஆகியவை முழுமையான பொது ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப் படாவிட்டால், அதன் பிடி மேலும் மேலும் பரவிக் கொண்டே செல்லும். தமிழில் சுருக்கம் : ச.வீரமணி பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஜூன் 28, 2026

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.