ஏன் ‘கேரளா 3.0’? ஒன்றிய அரசே வழங்கிய அங்கீகாரங்கள்!
3 Apr 2026, 5:05 pm
<p><strong>ஏன் ‘கேரளா 3.0’? ஒன்றிய அரசே வழங்கிய அங்கீகாரங்கள்!</strong></p>
<p>கேரளத்தின் இடதுசாரி அரசு மீது விமர்சனங்களை வைக்கும் பா.ஜ.கவினர், அதே பா.ஜ.க ஆளும் ஒன்றிய அரசு கேரளத்திற்கு வழங்கிய விருதுகளைப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். 2024-25 நிதியாண்டில் 100 நாள் வேலைத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதில் கேரளம் (38%) தேசிய சராசரியைவிட (7%) பன்மடங்கு முன்னிலையில் உள்ளது. முக்கியச் சாதனைகள் கல்வி மற்றும் சுகாதாரம்: நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீடு மற்றும் பள்ளி கல்வித் தரவரிசையில் கேரளம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. நாட்டின் முதல் டிஜிட்டல் எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையும் கேரளத்திற்கே உண்டு. உயர்கல்வி: தேசியத் தரவரிசையில் (NIRF) நாட்டின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களில் 42 கேரளத்தை சேர்ந்தவை. அதிகாரப் பரவலாக்கம்: இ-பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டங்களுக்காகப் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. தூய்மை: திறந்தவெளி கழிப்பிடமில்லா (ODF) முதல் மாநிலமாகத் திகழும் கேரளம், தூய்மை இந்தியா ஆய்விலும் முன்னணியில் உள்ளது. ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே கேரளத்தின் வளர்ச்சியை அங்கீகரித்துள்ள நிலையில், ‘கேரளா 3.0’ என்ற முழக்கம் வலுப்பெற்றுள்ளது.</p>
