திருப்பரங்குன்றம் விவகாரம் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?
6 Dec 2025, 2:48 pm
<p><strong>திருப்பரங்குன்றம் விவகாரம் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?</strong></p>
<p>அமைச்சர் கேள்வி? சென்னை, டிச. 6- திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சனிக்கிழமையன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, திமுக அரசு சட்டத்தை மதிக்கின்ற அரசு. அதுமட்டுமின்றி பக்தர்களின் நலன் காக்கும் அரசாகவும் இருக்கிறது என்றார். இந்த அரசைப் பொறுத்தவரை அனைவரும் சமம், திமுக ஆட்சியில் பிரிவினை ஏற்படாது என்று கூறினார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை இன்றைக்கு சங்கிகளைத் தவிர்த்து எல்லோரும் ஆதரவு தந்திருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், திருவண்ணாமலை மலையின் உச்சியில் தீபம் ஏற்றிய பின், மேலும் 5 இடங்களில் தீபம் ஏற்றுவோம் என்றால் ஏற்க முடியுமா? அதுபோல்தான் திருப்பரங்குன்றத்திலும் ஒரு இடத்தில் தீபம் ஏற்றிய பின் இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு என்றும் கேட்டார். 350 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திருவண்ணாமலையில் மலையின் உச்சத்தில் தீபம் ஏற்றுகிறார்கள். அதற்குப் பதிலாக வேறு ஐந்து இடத்தில் தீபம் ஏற்றினால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அது போன்றதுதான் திருப்பரங்குன்றத்தில் நடைபெறுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு பேசினார்.</p>
