மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கச் சொன்னால் கோபப்படுவது ஏன்? எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
10 Apr 2026, 5:30 am
<p><strong>மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கச் சொன்னால் கோபப்படுவது ஏன்? எடப்பாடிக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி</strong></p><p>சென்னை, ஏப். 9 - மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கச் சொன்னால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோபப்படுவது ஏன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>சென்னையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பதாக விமர்சித்தார். திமுக அரசின் சாதனைகளை விளக்கி அவர் வாக்கு சேகரித்தார்.</p>
