“தன்னை துறவி என அழைத்துக் கொள்ளும் மோடிக்கு எதற்கு விலையுயர்ந்த கடிகாரம்?”
20 Nov 2025, 3:46 pm
<p><strong>“தன்னை துறவி என அழைத்துக் கொள்ளும் மோடிக்கு எதற்கு விலையுயர்ந்த கடிகாரம்?”</strong></p>
<p>பிரதமர் மோடி சமீபத்தில்,”நான் ஒரு துறவி (பக்கீர்). ஏழைகளுக்காகப் போராடும் பலத்தை இந்த துறவி வாழ்க்கை தான் எனக்குக் கொடுத்தது” என கூறினார். இந்நிலையில், துறவி என்று கூறிக் கொள்பவருக்கு ஆடம்பர கடியாரம் எதற்கு? என “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகா ரப்பூர்வ ஏடான சாம்னா வெளியிட் டுள்ள செய்தியில், “பிரதமர் மோடி தன்னை ஒரு துறவி என்று அழைத்துக் கொள்கிறார். ஆனால் பொது நிகழ்ச்சி களில் அவர் விலை உயர்ந்த கடிகாரம் அணிந்து வருகிறார். இது யாரிடமும் இல்லாத சிறப்பு வேலைமிக்க கடி காரம் ஆகும். ஜெய்ப்பூர் கடிகார நிறு வனத்தின் “ரோமன் பாக்” (Roman Baag) மாடல் ஆகும். இந்தக் கடிகாரத்தின் உட் புறத்தில் புலிச் சின்னம் பொறிக்கப் பட்ட மற்றும் 1947ஆம் ஆண்டின் “ஒரு ரூபாய்” நாணயம் இடம்பெற்றுள் ளது. இந்த கடிகாரம் மிக விலை உயர்ந்த தாகும்” என அதில் கூறப்பட்டுள்ளது. கோவையில் சிக்கியது இந்த சிறப்பு வேலைமிக்க கடிகா ரத்தை பிரதமர் மோடி கடந்த சில நாட்க ளாக அணிந்து வந்தாலும், புதன்கிழமை அன்று கோவையில் நடைபெற்ற விவ சாயிகள் மாநாட்டில் அவரது கையில் தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
