மதவாதிகள் நேருவை ஏன் எதிர்க்கிறார்கள்? - மா.முருகன்
13 Nov 2025, 3:30 pm

மதவாதிகள் நேருவை ஏன் எதிர்க்கிறார்கள்?

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, மதச் சார்பின்மையின் தீவிர ஆதரவாள ராக விளங்கினார். பரந்த மத, மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, தேசிய ஒற்று மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் மதச்சார் பின்மையே அத்தியாவசிய அடித்தளம் என்று நேரு உறுதியாக நம்பினார்.

நேருவின் மதச்சார்பின்மைப் பார்வை

மத விஷயங்களில் அரசு கண்டிப்பாக நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து நம்பிக்கைகளுக்கும் சமமான மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதே சமயம், பகுத்தறிவுச் சிந்தனை, மனிதநேயம் மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவர் தீவிரமாக ஊக்குவித்தார்.

இந்தியாவின் பன்முகத்தன்மையை நேரு ஒரு பலவீனமாக அல்ல, பலமாகவே பார்த்தார். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களையும் ஒரே தேசமாக வைத்திருக்க, ஒரு மதச்சார்பற்ற கட்டமைப்பால் மட்டுமே முடியும் என்று அவர் நம்பினார். மேலும், வகுப்புவாத கலவரங்களைத் தடுக்கவும், தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும் மதச்சார்பின்மை ஒரு அரசியல் தேவையாகும்.

சிறுபான்மையினர் பாதுகாப்பு

சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை என்று நேரு கருதினார். மத மற்றும் மொழிச் சிறுபான்மை யினருக்கு முழுப் பாதுகாப்பு அளிப்பதுடன், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவும் தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார்.

அவரைப் பொறுத்தவரை, சிறுபான்மை வகுப்புவாதம் அல்லது பெரும்பான்மை வகுப்புவாதம் என எந்த வகுப்புவாதமும் நாட்டிற்கு கேடு விளைவிக்கும் என்பதாலும், மக்கள் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்பதாலும், அவர் வகுப்புவாதத்தை உறுதியாக எதிர்த்தார். மேலும், மதச்சார்பின்மைக் கோட்பாடு மட்டுமே சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காக்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

பாசிசத்தின் இந்திய வடிவம்: வகுப்புவாதம்

நேரு வகுப்புவாதத்தை பாசிசத்தின் இந்திய வடிவம் என்றே கருதினார். மதச்சார்பின்மையே ஜனநாயகத்தின் அடிப்படை நிபந்தனை என்றார். 1930களின் இறுதியிலேயே பாசிசத்துக்கும் வகுப்புவாதத்திற்கும் உள்ள நெருக்கமான உறவை அவரால் உணர முடிந்தது. என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன” என்று குறிப்பிட்டார். மேலும், சத்யாகிரகம் மற்றும் அறவழியில் இந்த அமைப்புகளுக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறினார்.

மதவாதிகள் ஏன் நேருவை எதிர்க்கிறார்கள்?

நேருவின் இந்த உறுதியான நிலைப் பாட்டினால் தான் மதவாத மற்றும் வகுப்புவாத சக்திகள் அவரைத் துளியும் ஏற்காமல் எதிர்க்கின்றன. அவர் மதச்சார்பின்மையை அரசியல் நடுநிலைமை என்று மட்டும் கருதாமல், கண்மூடித்தனமான நம்பிக்கைகள் மற்றும் மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து, பகுத்தறிவு மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய ஒரு கலாச்சார நோக்குநிலை என்றும் கண்டார். மதவாதத்தை இந்தியாவின் நவீனமயமாக்கல் மற்றும் வளர்ச்சிக்குத் தடைகளாகக் கருதினார்.

வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட நேரு, சமூகத்தில் மதம் ஏற்படுத்தும் ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டார். நவீன காலத்தில் மக்களின் வாழ்க்கையை முன்னேற் றும் கருவியாக அரசு இருக்கும் நிலையில், அந்த அரசோடு மதம் கலக்கிறபோது பேராபத்துகள் ஏற்படும் என்று உணர்ந்தார்.

இன்று, மதச்சார்பின்மையின் மீதே ஒரு தேசத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற நேருவின் கனவின் வலிமையை நாம் உணர்வது மிகவும் அவசியமாகிறது. மதம் சார்ந்த தேசியங்கள் பெருகி வரும் இக்காலத்தில், நேருவின் மதம் சாராத நம்பிக்கையே ஒரு தேசத்தைக் கட்டமைக்க ஏற்றது என்ற பார்வை முழுக்க முழுக்கச் சரியானது.