ஸ்கேன் இந்தியா
10 Feb 2026, 4:50 pm

ஸ்கேன் இந்தியா

நேர்மைக்குப் பரிசு

உத்தரகண்டில் மதவெறியர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தீபக்கின் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்பவர்களைத் தடுக்கும் வேலை நடக்கிறது. மதவெறியர்களின் அட்டூழி யத்திற்கு முன்பாக, 150 பேர் அன்றாடம் வந்து கொண்டிருந்தார்கள். குண்டர்களின் மிரட்டல்க ளால் தற்போது வெறும் 15 பேர்தான் வருகிறார் ்கள். 70 வயது இஸ்லாமிய முதியவருக்கு எதிரான மதவெறியர்களின் தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு, தன்னை “முகமது” தீபக் என்றும் துணிச்சலாக அழைத்துக் கொண்டார். மாநில, மாவட்ட நிர்வாகங்கள் அவருக்கு எதிராக வேலை செய்கின்றன. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களில் சிலர் அவருடன் உறுதியாக நிற்கிறார்கள். அதேவேளையில், நமது நேர்மைக்கு இத்தகைய பரிசுகள் கிடைப்பது தற்போது அரசியல் சூழ்நிலையில் வாடிக்கையாகி விட்டது என்று அவர்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.

டப்பா என்ஜின்

தில்லியில் பாஜகவின் இரட்டை என்ஜின் சர்க்கார் பல்லிளித்துக் கிடக்கிறது. சட்டம் ஒழுங்கு படுமோசமான நிலையில் உள்ளது. வடமேற்கு தில்லியில் ஒரு தொழிற்சாலைக்கு வெளியில், மதிய வேளையில், அனைவரின் கண் முன்பாக வைபவ் காந்தி என்ற வர்த்தகர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலைகாரர்கள் அவரை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் அவர் உயிரிழந்தார். இந்தக் கொலை தில்லி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. கொலைகாரர்கள் பிடிபட்டது பற்றிய தக வல்கள் எதுவும் வெளியாகவில்லை. கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவை பாஜக ஆட்சியில் அதிகரித்து விட்டன என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்ற வாடிக்கையான பதிலை மட்டுமே தில்லிக் காவல்துறை தந்து கொண்டிருக்கிறது.

பாஜக அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் 12 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளா ட்சித் தேர்தல் முடிவுகளில், பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தாலும், அதிர்ச்சியும் அடைந்துள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை விடவும் அதிக இடங்கள் வெல்வார்கள் என்று பாஜக எதிர்பார்க்கவில்லை. மாவட்ட பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய வார்டுகளில் 21 விழுக்காட்டை தேசியவாத காங்கிரஸ் பெற்றிருக்கிறது. ஏற்கெனவே, கட்சியின் இரண்டு பிரிவுகளும் ஒன்றிணைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து, அஜித் பவாரின் திடீர் மறைவால் அது நின்று போயிருக்கிறது. கட்சியில் உள்ள சில தலைவர்கள் மீது வழக்குகளைக் கொண்டு கட்டுப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்திருந்த பாஜகவுக்கு, அக்கட்சி க்குக் கிடைத்துள்ள வெற்றி முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

மக்கள் அதிருப்தி

சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், திரி ணாமுல் காங்கிரஸ்காரர்களின் வன்முறை வெறியாட்டம் குறையும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகள், மிரட்டல்கள் அதி கரிக்கவே செய்துள்ளன. வடக்கு 24 பர்கானாஸ் மாவட் டத்தில் 81 வயது முதியவர் ஒருவரை திரிணாமுல் கவுன்சிலர் எட்டி உதைத்திருக்கிறார். சட்டவிரோதமாக ஒரு கட்டடத்தை எழுப்பிக் கொண்டிருப்பதற்கு எதிரா கப் போராட்டம் நடந்துள்ளது. அதில் கலந்து கொண்டி ருந்தவர்கள் மீது கவுன்சிலர் ரவீந்திரநாத் பட்டாச் சார்யா தாக்க முயன்றுள்ளார். அப்போது முதியவர் துளசி அதிகாரி குறுக்கே புகுந்து தடுத்திருக்கிறார். கவுன்சிலர் உதைத்ததில் துளசி அதிகாரி உயிரிழந்து விட்டார். நாடியா மாவட்டத்தில் மாணவர்களைத் தாக்கிய விவகாரத்தில் ஒரு எம்எல்ஏ நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.