தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

யார் மன்னிப்பு கேட்க வேண்டும்? - ச.வீரமணி

yesterday
யார் மன்னிப்பு  கேட்க வேண்டும்? - ச.வீரமணி

யார் மன்னிப்பு கேட்க வேண்டும்? - ச.வீரமணி

கடந்த சில வாரங்களாக, பிரதமர் நரேந்திர மோடி ‘உண்மை நிலையை தலைகீழாகப் பார்க்கும் மனநிலை’ (realityinversion syndrome) எனும் பாதிப்புக்கு நிரந்தரமாக ஆளாகியுள்ளார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அவரைப் பொறுத்தவரை, ‘ஜென்-இசட்’ (GenZ) தலைமுறையினரின்எழுச்சியும், மக்கள் நலனுக்கு எதிரான தனது அரசின் போக்கும், மக்களை ஆட்கொண்டுள்ள கடுமையானஉண்மை நிலையும் ஒன்றுக்கொன்று நேரடி முரண்பாட்டில் உள்ளன. தனது நிர்வாக பாணிக்கும், அதே சமயம்கடந்த சில வார நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக உள்ள மோதல் போக்குக்கும் இடையே உள்ள பெரும்இடைவெளியைச் சரிசெய்யும் நோக்கில் அவர் தொடர்ந்து வெளியிடும் இரவு நேரக் காணொலிச் செய்திகளேஇதற்கான தெளிவான சான்றாக அமைந்துள்ளன.

உண்மைக்கு முரணான அணுகுமுறையும் ஆணவப் போக்கும்

தகவல் பரிமாற்றத்தில் உள்ள இந்த இடைவெளியைச் சரிசெய்யும் முயற்சியிலும், அவர் உண்மைக்குமுரணான ஒரு கண்ணோட்டத்தையே தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஜென்-இசட் என்று அழைக்கப்படும்,பல்வேறு பின்னணிகளைக் கொண்டஇளம் தலைமுறையினரிடமிருந்து எழுந்த பரவலானமற்றும் தீவிரமான எதிர்ப்பை எதிர்கொள்ள மிகக்கொடூரமான வன்முறை நடவடிக்கைகள் கையாளப்பட்டபின்னரும் கூட, அவர் அதே ஆதிக்க மனப்பான்மையுடனான, மேலிருந்து கீழாகப் பார்க்கும் தொனியிலேயே இளம் போராளிகள் “மன்னிப்பு” கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளார். குறிப்பாக, பெண் போராளிகள் பயன்படுத்திய மொழிநடை அவரைமிகவும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. சுவாரஸ்யமாக, அவர்களில் சிலர், “அங்கிள், நேரம் ஆகிவிட்டது,தயவுசெய்து போய் தூங்குங்கள்!” என்று நையாண்டியாக பதிலடி கொடுத்துள்ளனர்.

இது வயது இடைவெளி அல்ல; அவருக்கும் போராளிகளுக்கும் இடையிலான தலைமுறை வேறுபாடுகள் பற்றியதும்அல்ல. இது ஓர் அடிப்படைப் பார்வைக்கோளாறு சார்ந்த விஷயம். ஜனநாயக அமைப்புகளில் ‘பொறுப்புக்கூறல்’(accountability) குறித்த மிக முக்கியமான கேள்வியை போராடிய இளைஞர்கள் எழுப்பியுள்ளனர். தர்மேந்திரபிரதானை பதவி விலகச் செய்வது மட்டுமே இந்தப்போராட்டங்களின் அடிப்படை நோக்கம் அல்ல என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இளைஞர்களின்கனவுகள் சிதைக்கப்பட்டதை உணர்ந்துகொள்வதிலும், அதற்கான தீர்வைக் காண்பதிலும் அரசு காட்டிய முழுமையான இயலாமை மற்றும் தோல்வியால் ஏற்பட்ட பொறுப்புக்கூறல் இல்லாமை என்றநிலையைச் சரிசெய்வதே இந்தப் போராட்டங்களின் உண்மையான நோக்கமாக இருந்தது.

மோடி தலைகீழான அணுகுமுறையைக் கையாளுகிறார். மிக அடிப்படையான விஷயங்களைக் கையாள்வதற்குப்பதிலாக, நிலைமையை இன்னும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதாக ஒரு மாயையில் வாழ அவர் விரும்புகிறார். போராட்டக்காரர்களின் எதிர்வினைகளுக்காக அவர்கள் மன்னிப்பு கோருவதை ஏற்றுக்கொள்வதே தீர்க்கப்பட வேண்டியஅடிப்படைப் பிரச்சனை என்றுஅவர் நினைத்துக்கொண்டு, மோதலைத் தள்ளிப்போடப் பார்க்கிறார். இது யதார்த்தத்திற்கு முற்றிலும் முரணான ஒன்றாகும். உண்மையில், இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர் மோடிதான்!

அரசின் கொடூர அடக்குமுறையும் வெட்டவெளிச்சமான உண்மைகளும்

கிடைத்துள்ள ஏராளமான உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில், தில்லி காவல்துறையும் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பிற அமைப்புகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் கொடூரமானவை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் விவரங்கள் தற்போதுவெளிவந்துள்ளன. நாட்டில் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வெளியே, தில்லியில் தான் போராட்டங்களைக்கட்டுப்படுத்த முதன்முறையாகப் ‘பெல்லட்’ துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ஆணிகள்பதிக்கப்பட்ட தடிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, வன்முறையைத் தூண்டிவிட்டு, அதன் பழியை இளம்போராட்டக்காரர்கள் மீது சுமத்துவதற்காக, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு லாரியில் கற்களைச் சேகரித்துவைத்திருந்தது மிகவும் மோசமான செயலாகும்.

இத்தகவல்கள் இணையதளங்களில் மட்டுமல்லா மல், தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம்ஆகியவற்றில் நடைபெறும் விசாரணைகளின்போதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அரசின்உயர்மட்ட சட்டஅதிகாரிகள் இக்கட்டான சூழலில்சிக்கியுள்ளனர். அதேவேளையில், தில்லி காவல்துறையின் உயர்அதிகாரிகளிடமும் இதற்கு எந்தவொரு ஏற்புடைய விளக்கமும் இல்லை.

யார் மன்னிப்பு கேட்க வேண்டும்? இளம் மாணவர்களா, அல்லது அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தின் கூட்டுப்பொறுப்புக்கூறல் எனும் கோட்பாட்டிற்கு உட்பட்ட அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியா?இதற்கான விடை மிகத்தெளிவானது. கடந்த இரண்டு வாரங்களாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் உள்துறைஅமைச்சர் ஆகியோர்இல்லாதது, பல வார்த்தைகளை விடவும் ஆழமான செய்தியை உணர்த்துவதாகஅமைந்திருக்கிறது.

மன்னிப்பை ஏற்றுக்கொள்வது போன்ற பாவனையைக் காட்டினாலும், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் இந்துத்துவாக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்இளம் போராளிகளைத் தொடர்ந்துதுன்புறுத்தியும், மிரட்டியும் வருகின்றனர். நொய்டாவில் வசிக்கும் 15 வயதுசிறுமி ஒருவர் கட்டாயத்தின் பேரில் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். இருப்பினும்,மிரட்டல்கள் தொடர்ந்ததால்,அந்தச் சிறுமியும் அவரது தாயாரும் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறும்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மகளிர் இடஒதுக்கீடு நாடகமும் ‘ஆபரேஷன் தாமரை’யும்

மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முயற்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன என்றபொய்யானகுற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், இவ்விஷயத்தில் அரசின் இரட்டை வேடம்இப்போதுதெளிவாகியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியநடைமுறைகளிலிருந்து மகளிர்இடஒதுக்கீட்டைப் பிரித்து, அதை உடனடியாக அமல்படுத்தக் கோரி, பல்வேறுமகளிர் அமைப்புகளின் கூட்டமைப்பு தொடர் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால்,நாடாளுமன்றத்தில் அரங்கேறிய அந்த நாடகம் மகளிர் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதைநோக்கமாகக்கொண்டிருக்கவில்லை. மாறாக, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பதன்மூலம் நமதுபிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மீது ஆர்எஸ்எஸ்/பாஜக அமைப்புகள் கொண்டுள்ளபிடியைநிரந்தரமாக்கிக்கொள்ளும் நோக்கத்தையே அது கொண்டிருந்தது.

இந்த நோக்கத்தை அடைவதற்கான மற்றொரு முயற்சியாக, ‘ஆபரேஷன் தாமரை’ (Operation Lotus) எனும் அருவருக்கத்தக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் இது, தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சிப்பிரதிநிதிகளைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ளும் ஒரு பேரமாகவே அமைந்துள்ளது. மக்களின் கருத்துகளும்அவற்றை வெளிப்படுத்தும் விதமும் செயலற்றவை என்று தவறாகக் கணக்கிடும் மனப்போக்கின் விளைவேஇத்தகைய நடவடிக்கைகளாகும். சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள், மக்களின் மனநிலை குறித்த ஆரம்பகட்ட அறிகுறியாகத் தோன்றுகின்றன.

மக்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளும் வீதிப் போராட்டங்களின் வெற்றியும் நாடாளுமன்றத்திற்குள் நடப்பவை மற்றும் தேர்தல் நேர்மை குறித்த கேள்விகளைத் தவிர,மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான அடிப்படைக் கேள்விகள் வலுப்பெற்று வருகின்றன. மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டுள்ள திட்டம், கிராம மக்களின் துன்ப துயரங்களையும் வேலையின்மையையும் மேலும் மோசமாக்கி இருக்கிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் ஒற்றுமை இப்போது விரிவடைந்து வருகிறது.

சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அளித்துவந்த சலுகைகளை விலக்கிக் கொண்டு, கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகைகள் அளிக்கப்பட்டுவருவதால், வேலையின்மை மற்றும் குறைந்த கூலியுடன் வேலைபார்க்கும் நெருக்கடிகள் தீவிரமாகியுள்ளன. இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தொழிலாளர் சட்டத்தொகுப்புகள், தொழிலாளர்களின்உரிமைகளை விரிவுபடுத்துவதற்கான கருவியாக அல்லாமல், அவர்களை ஒடுக்கும் கருவியாகவே வந்துள்ளது.

இதன் விளைவாக, அடித்தள வர்க்கங்களின் அமைப்புகள் போராட்டப் பாதையில் இறங்கியுள்ளன. உண்மை என்னவென்றால், நாடாளுமன்றப் பொறுப்புக்கூறல் மற்றும் தேர்தல் நேர்மைத்தன்மை ஆகியவற்றின்நம்பகத்தன்மையைச் சிதைப்பதன் மூலம், மோடியும் அவரது ஆதரவாளர்களும் உண்மையில்வீதிப்போராட்டங்களுக்கும் மக்கள்போராட்டங்களுக்கும் ஒரு நியாயமான அங்கீகாரத்தை அளித்துவிட்டனர். போராட்டங்கள் தீவிரமாகநடைபெற்று வருகின்றன; பிரதமர் மன்னிப்பு கோரும் நிலையை மக்கள் நிச்சயம் உருவாக்குவார்கள்.

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’, ஆகஸ்ட் 9, 2026 தமிழில் சுருக்கம்: ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.