யார் தேசத்துரோகி? மோடியா? ஷாருக் கானா?
3 Jan 2026, 2:20 pm
<p><strong>யார் தேசத்துரோகி? மோடியா? ஷாருக் கானா?</strong></p>
<p>புதுதில்லி வங்கதேச முன்னணி கிரிக்கெட் வீரர் முஸ்தபி ஷூர் ரகுமானை ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுத்ததற்காக, பாஜகவினர் திரைக்கலைஞர் ஷாருக் கானை தேசத்துரோகி என முத்திரை குத்தி வருகின்றனர். பாஜகவினரின் இந்த அடாவடி செயலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், ஷேக் ஹசீ னாவை இந்தியாவிற்குள் வைத்து பாதுகாக்கும் பிரதமர் மோடி தேசபக்தரா? தேசத்துரோகியா? என ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக செய்தியா ளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “கிரிக்கெட் வீரரை ஏலத்தில் எடுத்ததற்காக ஷாருக் கான் தேசத் துரோகியா? அப்படி என்றால் வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீ னாவை நம் நாட்டிற்குள் வைத்து பாதுகாக்கும் நரேந்திர மோடி தேசபக்தரா? தேசத்துரோகியா? ஷாருக் கானின் ஐபிஎல் அணி யான கொல்கத்தா ஒரு வங்கதேச வீரரைத் தேர்ந்தெடுத்ததற்காக இவ்வளவு பெரிய சர்ச்சை கிளப்பப்படுகிறது. இதுதான் நாட்டின் அரசியல் நிலைமை” என சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்</p>
