தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொடர் மின்தடைக்கு யார் காரணம்?

15 Jun 2026, 10:27 pm
தொடர் மின்தடைக்கு யார் காரணம்?

தொடர் மின்தடைக்கு யார் காரணம்?

தமிழகத்தில் நிகழாண்டு கோடை வெப்பம் கடுமையாக நீடித்து வரும் சூழலில், மின்தடைகளை மிகைப்படுத்தி மின் ஊழியர்களுக்கு எதிராகத் திருப்புவது ஏற்புடையதல்ல. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளின் மின் நுகர்வு அளவும் மின்தடையும் தான் நிகழாண்டிலும் ஏற்பட்டுள்ளது என மின்வாரிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தமிழக மின்வாரியத்தில் 3 கோடியே 40 லட்சம் நுகர்வோர்கள் உள்ளனர். பல ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள புதைவடங்களையும், மின்கம்பிகளையும் உரிய காலத்தில் பராமரிப்பது வாரியத்தின் தலையாய கடமையாகும். ஆனால், மின்வாரியத்தில் உள்ள

1 லட்சத்து 40 ஆயிரம் பணியிடங்களில் 72,000 பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக உள்ளன. குறிப்பாக, பொதுமக்களுக்கு நேரடியாகச் சேவை செய்யும் பிரிவில் 46,000 கள உதவியாளர் மற்றும் கம்பியாளர் பணியிடங்கள் நீண்டகாலமாகக் காலியாக வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பாமல் தடையில்லா மின்சாரம் வழங்குவது சாத்தியமற்ற ஒன்றாகும்.

மின்தடைக்கு உண்மையான காரணம் கடந்த 5 ஆண்டுகளாக நுகர்வோருக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் புதிய பணியாளர்களை நியமிக்காததே ஆகும். இதன் காரணமாக, மின்வழித்தடங்களைப் பராமரிப்பு செய்யும் மிக முக்கியமான பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறவில்லை. ஆள் பற்றாக்குறையால் காலாண்டு பராமரிப்பு, கோடைக்காலப் பராமரிப்பு, மழைக்காலப் பராமரிப்பு போன்ற எந்தவொரு அத்தியாவசியப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. முறையாகப் பராமரிப்புப் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்திருந்தால் தற்போதைய மின்தடை ஏற்பட்டிருக்காது.

எனவே, இந்த மின்தடைக்குக் காரணம் ஊழியர்கள் அல்ல; போதிய பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்காத அரசின் கொள்கை முடிவே ஆகும். மக்கள் நலன் சார்ந்த இப்பிரச்சனை மேலும் தீவிரமடையாமல் இருக்க, மின்தடைக்கு நிரந்தரத் தீர்வுகாண அரசு உடனடியாக போதிய களப்பணி ஊழியர்களை நியமிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்துவோம். - தி.ஜெய்சங்கர்

​​​​​​​பொதுச்செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.