எபோலா வைரஸ் நிலைமையைக் கண்காணிக்கும் உலக சுகாதார அமைப்பு
29 May 2026, 8:31 pm

எபோலா வைரஸ் நிலைமையைக் கண்காணிக்கும் உலக சுகாதார அமைப்பு

காங்கோவில் மிகவேகமாக பரவி வரும் அரிய வகை எபோலா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சி களை நேரில் பார்வையிடுவதற்காக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அந்நாட்டுக்கு சென்றுள்ளார். தற்போது பரவி வரும் ‘புந்தி புகியோ’ என்ற எபோலா வைரஸை கட்டுப் படுத்த அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லாத நிலையில் அதைக் கட்டுப்படுத்த, போதிய மருத்துவப் பொருட்களும் இல்லை. இந்நிலையில் சூழலைக் கட்டுப்படுத்த சுகாதார ஊழியர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு போதிய அளவில் முகக்கவசங்கள் கூட இல்லாத நிலை உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போரை முழுமையாக நிறுத்த அழைப்பு

உக்ரைன்-ரஷ்யப் போரை உடனடியாக வும் முழுமையாகவும் தணிக்க வேண்டும் என்று ஐ.நா அவை பொதுச்செயலாளர் அந்தோ ணியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இத்தாக்குதல்களைத் தொடர்ந்து, உக்ரைன் - ரஷ்யப் போர் குறித்த பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் பேசிய குட்டரெஸ், இந்தப் போரின் போக்கு கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயத்தைக் கொண்டுள்ளது. தற்போதைய போக்கு தொடரக் கூடாது. இந்தப்பாதை மாற வேண்டும். தொடர் மரணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

ஜப்பானின் மக்கள் தொகை 2.5 சதவீதம் சரிவு

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானில் கடந்த ஐந்து ஆண்டுக ளில் மக்கள் தொகை வரலாறு காணாத வகையில் 2.5 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ஜப்பானின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆரம்ப கட்டத் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் அந்நாட்டின் மக்கள் தொகை 123 மில்லியனாகக் குறைந்துள்ளது கண்டறியப் பட்டுள்ளது. இது, இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பை விட 3 மில்லியனுக்கும் அதிகமாக மக்கள் தொகை குறைந்துள்ளது.

குழந்தைகளுக்கு இணைய பாதுகாப்பு கடுமையான விதிமுறைகள் வேண்டும்

குழந்தைகளுக்கு இணையதளங்களை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவ தற்கு, உலக நாடுகள் மேலும் அதிக வலுவான விதிமுறைகளையும் கண்காணிப்பையும் கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் அழைப்பு விடுத்துள் ளது. இணையத்தில் குழந்தைகளின் பாது காப்பை மேம்படுத்துவது ஒரு அவசரமான முன் னுரிமையாகும். இது செய்யப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அது சரியான முறையில் செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்,” என்று ஐநா மனித உரிமை கள் உயர் ஆணையர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் ஆசியான் சிறப்பு உச்சிமாநாடு

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்ட மைப்பான ‘ஆசியான்’ அமைப்பின் தலைவர்கள் ஜூன் 17 -18 தேதிகளில் ரஷ்யா வில் நடைபெறும் ஒரு சிறப்பு நினைவு உச்சிமா நாட்டில் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ஆசியான் நாட்டு தலை வர்கள் வர்த்தக ரீதியாக உரையாடுவார்கள் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் போரால் சர்வ தேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந் துள்ள நிலையில் ஆசியான் உறுப்பு நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கு வதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில் இம்மாநாடு பொருளாதார உறவுகளை மேலும் வலுப் படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசாவை மேலும் ஆக்கிரமிக்க நேதன்யாகு திட்டம்

காசா பகுதியில் சுமார் 60 சதவிகித பகுதி யை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள் ளது. இந்த ஆக்கிரமிப்பு அளவை 70 சதவிகித மாக அதிகரிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டமிட்டுள்ளார். லெபனான் மீதான போரின் ஒரு பகுதியாக அந்நாட்டின் நிலங்க ளையும் ஆக்கிரமித்து வரும் நிலையில் நாட்டின் பரப்பளவை விரிவாக்கம் செய்வது இஸ்ரேல் அரசின் குறிக்கோள் என தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் படிப்படியாக ஆக்கிரமித்து வருகிறோம். முதலில், 70 சதவிகிதத்தில் துவங்கி 100 சதவிகிதமும் ஆக்கிரமிப்போம் என கூறி யுள்ளார்.