பெண்கள் ஆரோக்கியம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு
8 Mar 2026, 3:42 pm
<p><strong>பெண்கள் ஆரோக்கியம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு</strong></p>
<p>சென்னை,மார்ச் 8- சென்னையில் நடை பெற்ற ‘தாரகை 2026’ மாநாட்டின் மிக முக்கிய மான நிகழ்வாக, பெண்கள், ஆரோக்கியம் மற்றும் பாது காப்பு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப் பட்டது. தொழில் துறை, சுகா தாரம், அரசு மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர் களுடன் விரிவான ஆலோ சனைகள் மேற்கொள்ளப் பட்டு இந்த அறிக்கை உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது, தமிழ்நாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால் களைக் களைந்து, அவர்க ளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான தெளிவான கொள்கை பரிந்துரைகளை முன்வைக்கிறது. குறிப்பாக, சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல், பணியிடங்களில் பெண்க ளுக்கான பாதுகாப்பு அமை ப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் பாலின சமத்துவத் தைப் பேணும் பணியாளர் கொள்கைகளை உருவாக் குதல் ஆகியவற்றுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று இந்திய தொழிற் கூட்டமைப் பின் (சிஐஐ) பெண்கள் பிரிவு தலைவர்அமுதவல்லி ரங்க நாதன் கூறினார். பெண்கள் பணியிடங் களிலும் சமூகத்திலும் முழு மையாகப் பங்கேற்க உத வும் ஆதரவான சூழலை உரு வாக்க இந்த அறிக்கை ஒரு வழிகாட்டியாக அமையும் என்று மாநாட்டில் வலி யுறுத்தப்பட்டது என்று சிஐஐ தமிழ்நாடு தலைவர் ஏ.ஆர்உண்ணிகிருஷ்ணன் தெரிவித்தார்.</p>
