செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியில் வெள்ளை கோட்டு அணிவிக்கும் விழா
7 Dec 2025, 3:52 pm
<p><strong>செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியில் வெள்ளை கோட்டு அணிவிக்கும் விழா</strong></p>
<p>கிருஷ்ணகிரி, டிச.7 - ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு 250 மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை கோட்டு அணிவிக்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் அறங்காவலர் குழு முதன்மை உறுப்பினரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான முனைவர் தம்பிதுரை தலைமை தாங்கி சிறப்புரை யாற்றினார். லைவ் லைஃப் ஃபவுண்டேஷன் நிறுவனர் மருத்துவர் கண்ணன்கிரீஸ், அறங்காவலர் குழு தலைவர் மருத்துவர் பானுமதி,அறங்காவலர் குழு செயலாளர் மருத்துவர் லாசியா, அறங்காவலர் குழு உறுப்பினர் மருத்துவர் நம்ரதா,துணை முதல்வர் ஆனந்த ரெட்டி,மருத்துவ ஆய்வாளர் மருத்துவர் கிரீஸ் எஃப் ஹோங்கல், டீன் முத்தையா முன்னிலை வகித்தனர். மருத்துவ மாணவர்கள் மருத்துவராகி மக்களுக்காக உண்மையான சிறந்த சேவை செய்வதற்கான உறுதிமொழி ஏற்றனர். சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் கேடயங்கள் வழங்கப்பட்டது.முடிவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.</p>
