தீக்கதிர் முக்கிய செய்திகள்
8 Feb 2026, 3:55 pm

திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் பேசி வருகிறார்!

டி.கே.எஸ் இளங்கோவன் தகவல் சென்னை: திமுக கூட்டணியில் இணைய பாமக தரப்பில் இருந்து தொடர்ந்து பேசி வருவதாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் துணை தலைவர் இதயத்துல்லா விற்கு காமராஜர் விருது அளிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரி விக்கும் விழா நடைபெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியை அப்படியே காப்பி அடித்து அதிமுக வெளியிட்டு வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி தான் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி னார். திமுக கூட்டணியில் இணைய பாமக தலைவர் ராம தாஸ் தரப்பில் இருந்து தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதாக இளங்கோவன் தெரிவித்தார். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதம் உள்ளதால், கூட்டணிக்கு தேவையான நல்ல முடிவு எட்டப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தை குழு இன்னும் திமுகவில் அமைக்கப்படவில்லை என்றும், குழு அமைக்கப்பட்ட பிறகு எல்லோரும் சுமுகமாக இணைந்து செயல்படும் வகையில் கூட்டணி செயல்படும் என்றும் அவர் கூறினார்.

200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும்: நடிகர் வடிவேலு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சைதாப்பேட்டை சென்னை மாதிரிப் பள்ளி மைதானத்தில் முதல்வர் கோப்பை மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன. இதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற வீராங் கனைகளுக்கு நடிகர் வடிவேலு மற்றும் நடிகை தேவயானி ஆகியோர் கோப்பைகளை வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, முதல்வர் கோப்பை போட்டிகள் வெறும் முதல்வருக்கான கோப்பை மட்டுமல்ல, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்குமான கோப்பை. 200 தொகுதிகளுக்கு மேல் திமுக நிச்சயம் வெற்றி பெறும். 200 நிச்சயம், 200-க்கும் மேல் வெற்றி பெறுவது லட்சியம். பெண்களுக்கு அருமையான திட்டங்களை நிறை வேற்றியது திமுகதான்.இந்த அரசு எப்போதும் தோற்காது, வெற்றி மேல் வெற்றி பெறும் என்று பேசினார். நடிகை தேவயானி, பெண்களை விளையாட்டுப் போட்டி களில் ஊக்குவிக்கும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கருத்து வேறுபாடு இல்லை! செல்வப்பெருந்தகை உறுதி

சென்னை: திமுகவுக்கும் காங்கிரசுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். காந்தி பெயரை சிதைக்கத் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் தொடரும் என்று அவர் தெரி வித்தார். திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்டாயம் கலந்து கொள்ளும் என்றும், திமுகவுடன்தான் இணைந்து பயணிப்போம் என்றும் அவர் உறுதியளித்தார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று செல்வப்பெருந்தகை தெளிவு படுத்தினார்.

சனாதன பாசிச சக்திகளை வீழ்த்துவதே இலக்கு: திருமாவளவன்

சென்னை: சனாதன பாசிச சக்திகளை வீழ்த்துவதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இலக்கு என்று கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டணி விஷயத்தில் தனிநபர் யார் மீதும், எந்த கட்சியின் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை என்று வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக ஒரு சாதியினருக்கோ அல்லது மதத்தின ருக்கோ எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சிந்தித்ததோ செயல்பட்டதோ இல்லை என்று தெரிவித்துள்ளார். வன்னி யர் சமூக மக்களுக்கு எதிராக முடிவு எடுப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிக்கு அனைத்து வகை யிலும் ஒத்துழைக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரி வித்துள்ளார். தமிழ்நாட்டை சூழும் சனாதன பாசிச சக்தி களை வீழ்த்துவதே இலக்கு என்று வலியுறுத்தியுள்ளார். திரிப்புவாதங்களுக்கும், அவதூறுகளுக்கும் இடம் தரும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கருத்து அமைந்துவிட கூடாது என்று கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் விசிலுக்கு தடை

சென்னை: சேப்பாக் கம் எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தின் உள்ளே விசில் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருப் பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இந்த தடைக்கு ஐசிசி அல்லது பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த சம்பந்தமும் இல்லை என்று சேப்பாக்கம் மை தான நிர்வாகம் தெரி வித்துள்ளது. ஏற்கனவே வாட்டர் பாட்டில், பவர் பேங்க், குடை உள்ளிட்ட தூக்கி எறிய வாய்ப்பு இருக்க கூடிய பொருட்களுக்கு மைதானத்திற்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டி ருந்த நிலையில், தற்போது அந்தப் பட்டிய லில் விசிலும் இணைந்து உள்ளது. மேலும், மைதா னத்தை சுற்றியுள்ள சாலையோர விற்பனைக் கடைகளிலும் விசில்களை விற்பனை செய்யக் கூடாது என காவல்துறை வலியுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது. ஐபிஎல் போட்டிகளின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்லோ கனாக “விசில் போடு” பாடல் இருக்கிறது. சிஎஸ்கே போட்டிகளின் போது சேப்பாக்கம் மை தானத்தில் இந்தப் பாடல் போடப்படும். இந்நிலை யில் விசிலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கிரிக் கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.