‘இரட்டை இலை சின்னம் எங்கே?’
25 Mar 2026, 5:29 pm
<p><strong>‘இரட்டை இலை சின்னம் எங்கே?’</strong></p>
<p>திருவையாறு தொகுதியில் இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் வாக்களிக்க மாட்டோம் என்று சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தஞ்சை மாவட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிமுக தலைமை, இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலிலும், ஒரு முறை திருவையாறு தொகுதியிலும் கூட்டணிக் கட்சிகளுக்கே இடம் வழங்கியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அம்மா முன்னேற்றக் கழகத்திற்கு திருவையாறு தொகுதி ஒதுக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனையடுத்து, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில்: “இரட்டை இலை சின்னம் எங்கே?” “கடந்த மூன்று தேர்தல்களில் திருவையாறு தொகுதியில் இரட்டை இலை சின்னம் போட்டியிட முடியாமல் தடுக்கும் துரோகிகளே!” “இரட்டை இலை சின்னம் இல்லையென்றால் கூட்டணிக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டர்களில் “அதிமுக உண்மைத் தொண்டன்” என்று போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.</p>
