தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாமெல்லாம் எப்புடி இருந்தோம்..!

28 Mar 2026, 4:13 pm
            நாமெல்லாம் எப்புடி இருந்தோம்..!
<p><strong>நாமெல்லாம் எப்புடி இருந்தோம்..!</strong></p> <p>கணேஷ் &ldquo;டேய்... பேனா வாங்க னும்..&rdquo; &ldquo;ஆமா... எனக்கும்.. 5 ரூபா பேனா வாங்கு போதும்..&rdquo; &ldquo;எனக்கும்..&rdquo; &ldquo;எனக்கும்..&rdquo; &nbsp;&ldquo;அண்ணா.. அஞ்சு பேனா குடுங்க..&rdquo; ஒவ்வொன்றாக கடைக்காரர் எடுத் துத் தர, வாங்கிய பையனும் தலைக் குப் பின்னால் நீட்டிக்கொண்டே இருந் தான். பின்னால் இருந்து வாங்கிய பை யன், மூடியைத் திறந்து நிப்பின் மேல் இருந்த ரப்பரைச் சுரண்டி எடுத்தான். பக்கத்தில் இருந்த மற்றொரு நண்ப னை இழுத்து, அவன் சட்டையில் எழுதிப்பார்த்தான். வெள்ளை சட்டை யில் நீலக்கோடுகள்.. &ldquo;டேய்.. சட்டைடா..&rdquo; என்றான் நண்பன். &ldquo;பேனா நல்லா எழுதுது..&rdquo; &ldquo;அதுக்கு என் சட்டைதானா கிடைச்சுது..&rdquo; இதைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பேரில் ஒருவர் மருதாசலம். மற்றொருவர் குமார். இருவரும் அரசுக் கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். அன்றைய தினம் முன் னாள் மாணவர்கள் சந்திப்பு. அதை யொட்டி போட்டிகள் உள்ளன. கட்டு ரைப் போட்டிக்காகத்தான் அன்று தற்போதைய மாணவர்கள் பேனா வாங்கிச் சென்று கொண்டிருந்தனர். &nbsp;அவர்கள் நகர்ந்தபிறகு, மருதா சலம் லேசாகக் செருமிக் கொண்டு தொடங்கினார். &ldquo;பாத்தியா, குமார்.. இதுதான் மில் லென்னியல், ஜென் ஸி தலைமுறை.. எதப்பத்தியும் கவலையில்ல.. எங்க எழுதிப் பாக்குறாங்க.. அந்த சட்டைய வாங்கிக் கொடுத்த அப்பா, அம்மா கண்ணுல தண்ணி வரும்..&rdquo; &ldquo;மருதா.. அந்தப் பையனப் பாத் தியா.. யாரோட சட்டைல எழுதுனா னோ, அந்தப் பையன்... அவன் ஒண் ணுமே சொல்லல..&rdquo; &nbsp;&ldquo;அதயும் சேத்துதான் சொல்றேன்.. நாமெல்லாம் எப்புடி இருந்தோம்..&rdquo; &ldquo;சரி.. சரி.. வா, போகலாம்..&rdquo; &nbsp;கல்லூரி வாசலில் பழைய நண்பர் கள் காத்திருந்தனர். &nbsp;&ldquo;ஏய்.. செல்வம், ராஜா, ரவி..&rdquo; கட்டியணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கியது. முன்னாள் மாணவர்கள் இளைஞர்களாக மாறிப் போயிருந்தனர். தேநீர்க் கூடத்தில் பழைய நினைவுகளை அசைபோடு கையில் தேநீர் ஆறிப் போனதால், அதைவிட்டு விட்டு வேறொரு தேநீ ருக்கு ஆர்டர் செய்தார்கள். ஒன்பது டீ சொல்லி, அதை பதினான்காகப் போட் டதைச் சொல்லிச் சிரித்துக் கொண் டனர். &nbsp;நிறைவுறும் தருவாயில் முன் னாள் மாணவர் சங்கத் தலைவர் மைக் கைப் பிடித்து, &ldquo;எல்லாருக்கும் ஒரு சர்ப் ரைஸ் இருக்கு&rdquo; என்றார். கூட்டம் அமைதியானது. &nbsp;&ldquo;நம்மில் பலர் சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்... நாம் ஒன்றாக இருந்தபோது பலர் நினைவில் நிற்கக் கூடிய செயல்களைச் செய்திருக் கிறார்கள்... இவர்களுக்கு பரிசு தர முடிவெடுத்திருக்கிறோம்..&rdquo; &nbsp;முதலில் எழுத்தாளர் போகன்...பின்னர் இயக்குநராக ஓய்வு பெற்ற ரத்னவேல், பாடகர் ஃபெரோஸ், விஞ் ஞானி சரவணன்.. என்று வரிசையாக மேடைக்கு அழைக்கப்பட்டனர். &ldquo;இத யாருமே எதிர்பார்க்க மாட் டீங்க... மாணவர் காலத்துல அதிக சேட்டை பண்ணுனவருக்கு ஒரு பரிசு குடுக்குறோம்.. &ldquo;மகா சேட்டையாளர்&rdquo; என்ற விருதைப் பெற மருதாசலத்தை அழைக்கிறோம்..&rdquo; &ldquo;நம்ம காலத்துல ஏப்ரல் 1 ஆம் தேதியன்னிக்கி சட்டைக்குப் பின் னாடி, மை அடிக்குற பழக்கம் இருந் துச்சு.. நம்ம மருதாசலம்தான் அதிக சட்டைய நீலநிறமாக்குவாப்ல..&rdquo; &nbsp;கல, கல சிரிப்போடு, கைதட்டல் எழுந்தது. மேடையின் முன்வரிசையில் வாயைப் பொத்திக் கொண்டு குமார் சிரித்துக் கொண்டிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.