கரைப்புதூரில் பணம் செலுத்தியவர்களுக்கு குடிநீர் இணைப்பு கிடைப்பது எப்போது?
5 Dec 2025, 4:21 pm
<p><strong>கரைப்புதூரில் பணம் செலுத்தியவர்களுக்கு குடிநீர் இணைப்பு கிடைப்பது எப்போது?</strong></p>
<p>திருப்பூர், டிச. 5 – பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தி ஓராண்டாகியும் வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக இவர்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஈ.பாலசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, ஈ.பாலசுப்பிரமணியம் கொடுத்துள்ள மனு வில் கூறியிருப்பதாவது: கரைப்புதூர் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சித் தலைவர் காலத்தில் வீட்டுக்குடிநீர் இணைப்புக்கு பலர் முன்பணம் செலுத்தியுள்ளனர். அதற்கான ரசீதுகளும் பெற்றுள்ளனர். 50க்கும் மேற்பட்டோரின் சான்று கொடுக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே இணைப்பு அனுமதி வழங்கப்பட் டும் கடந்த ஒரு வருடமாக குடிநீர் இணைப்பு தரப்படா ததால் மக்கள் இக்கட்டான நிலையைச் சந்தித்து வருகின்ற னர். மேலும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, மனுக் கொடுத்தும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்பட வில்லை. வரி செலுத்தத் தயாராக இருந்தும் இணைப்புத் தரப்படாததால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே மாவட்ட திட்ட இயக்குநர் கிராமசபையில் வழங்கிய உத்தரவுப்படி உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண் டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
