எப்போது தீரும் இந்த அவலம்?
17 Dec 2025, 4:11 pm
<p><strong>எப்போது தீரும் இந்த அவலம்?</strong></p>
<p>உடுமலை,டிச.17- மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியான குழிப்பட்டி முதல் குருமலை செல்லும் பாதைகளை மக்களே சரி செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடுமலை தாலுகாவிற்குட்பட்ட குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, மேல் குருமலை பகுதிகளுக்கு மக்கள் காட்டு வழி யில் நடைபாதையாக திருமூர்த்தி மலை அடிவார பகுதியில் இருந்து செல்வார்கள். இந்நிலையில், கடந்த மாதம் முதல் பெய்த மழையால் மலை பாதைகள் அனைத்தும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பாதைகளை சரி செய்யக் கோரி உடு மலை வருவாய் துறை மற்றும் வனத்துறையில் தகவல் தெரி வித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படு கிறது. இந்நிலையில், குழிப்பட்டியில் இருந்து குருமலைக்கு செல்லும் சேதமடைந்த பாதையை மலைவாழ் மக்களே ஒன்றி ணைந்து சரி செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். </p>
