தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விபி நகரில் பாதாளசாக்கடை எப்போது! திருவொற்றியூர் வார்டுகுழு கூட்டத்தில் கேள்வி

14 Nov 2025, 1:26 pm
விபி நகரில் பாதாளசாக்கடை எப்போது!  திருவொற்றியூர் வார்டுகுழு கூட்டத்தில் கேள்வி
<p><strong>விபி நகரில் பாதாளசாக்கடை எப்போது! &nbsp;திருவொற்றியூர் வார்டுகுழு கூட்டத்தில் கேள்வி</strong></p> <p>சென்னை, நவ.14- பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் வார்டுகுழு கூட்டம் மண்டலத் தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 4ஆவது வார்டு விபிநகரில் இதுவரை பாதாளசாக்கடை அமைக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தம் கோரப்படும் என்றும் கூறப்படுகிறது. எப்போது ஒப்பந்தம் கோரப்பட்டு பணி துவங்கும் என சிபிஎம் கவுன்சிலர் ஆர்.ஜெயராமன் கேள்வி எழுப்பினார். மேலும் தனது வார்டில் எட்டு சாலை பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். அதில் 4 பேர் பிற பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் பக்கவாட்டு கால்வாய் அடைப்புகளை அகற்றுவதில் தடை ஏற்படுகிறது. சீனி வாசன் என்பவர் விபத்தால் கடந்த 15 மாதங்களாக வேலைக்கு வராததால் அவருக்கு மாற்றாக யாரையும் நிய மிக்கவில்லை என்றும், இதனை சரிசெய்ய வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். நூறுக்கும் மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த அவர், தற்போது 8 சாலைகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், மேலும் அமைக்க வேண்டிய 36 சாலைகளையும் உடனே அமைக்க வேண்டும் என்றும் கூறினார். அகலம் குறைந்த சாலைகளை ஐஎல்பி சாலைகளாக அமைக்க வேண்டும் எனவும் கோரினார்.மின்வாரியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டு சேத மடைந்த மினி பில்லர்கள் பழுது பார்க்கப்படுவதாகவும், வள்ளுவர் நகர் மினி பில்லர் உடைந்துள்ளதை மாற்ற கடந்த 3 மாதங்களாக கேட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இதற்கு உதவி பொறியாளர் புண்ணியகோட்டி மினி பில்லர் வந்துள்ளதால் உடனே மாற்றப்படும் என்று பதிலளித்தார். ராமநாதபுரத்திற்கு தண்ணீர் முறையாக விநியோகம் செய்யப்படுவ தில்லை என்றும், தடையின்றி குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். அசோக் லேலண்ட், பவுண்ட்ரி, எம்ஆர்எப், ஐடிசி போன்ற கார்ப்பரேட் தொழிற்சாலைகள் லாபத்தில் 2விழுக்காடு சிஎஸ்ஆர் நிதியை நேரடியாக உள்ளூர் மக்களுக்கான அடிப்படை வசதிகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இதற்கு மண்டல அலு வலர் பத்மநாபன் உறுப்பினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று பதிலளித்தார். கூட்டத்தில் செயற்பொறியாளர் பாபு, சுகாதார மண்டல அலுவலர் மருத்துவர் லீணா, மெட்ரோ பகுதி பொறியாளர் முத்து விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.