தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கைவிடப்பட்ட ஏரி கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது எப்போது?

21 Feb 2026, 4:39 pm
கைவிடப்பட்ட ஏரி கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது எப்போது?
<p><strong>கைவிடப்பட்ட ஏரி கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது எப்போது?</strong></p> <p>தருமபுரி, பிப்.21- கைவிடப்பட்ட தூள்செட்டி ஏரி &nbsp;கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டத்தில் தருமபுரி - கிருஷ் ணகிரி ஆகிய மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் 120 ஏக்கர் பரப் பளவில் தூள்செட்டி ஏரி அமைந் துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத் தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றி லிருந்து வெளியேறும் உபரிநீரை அலியாளம் அணைக்கட்டின் வலது புறகால்வாய் வழியாக தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து, அதன் மூலம் தருமபுரி மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு நிரந் தர தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரு கிறது. இதற்காக இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.56.85 கோடி மதிப் பீட்டில் கால்வாய் அமைக்கும் பணி &nbsp;கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மொத்தம் 22.45 &nbsp;கி.மீ நீளமுள்ள 56 ஹெக்டர் நிலத் தில் கால்வாய் பணிக்கு ஒரு ஹெக் டர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப் பட்டுள்ளது. கோபாசந்திரம் வரை &nbsp;மட்டுமே 2.5 கிலோமீட்டர் தூரத் திற்கு பணிகள் நடந்துள்ளது. மீத முள்ள 55 ஹெக்டர் நிலம் கையகப் படுத்தப்படாமல் உள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, சூடானூர், சி. டி.பெட் டம், கொரவாண்ட அள்ளி, சிக்கமா ரண்ட அள்ளி வழியாக செட்டிப் பட்டி ஏரி, செங்கன்பசுவந்த லாவ் ஏரி களுக்கு தூள்செட்டி ஏரியில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து &nbsp;பல்வேறு ஏரி களில் அந்த தண் ணீரை நிரப்பி விவசாயிகளின் வாழ் &nbsp;வாதாரத்தை மேம்படுத்த வாய்ப்பு &nbsp;உருவாகும். கடந்த சில ஆண்டுக ளாக பருவமழை சரியாக பெய்யாத தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப் பட்டுள்ளது. தற்போது தென் பெண்ணையாற்றில் நீர்வரத்து அதி கரித்துள்ளது. அதிகளவில் ஆற் றில் தண்ணீர் செல்கிறது. ஆற்றின் &nbsp;உபரி நீரை தூள்செட்டி ஏரிக்கு &nbsp;கொண்டுவருவதன் மூலம் தருமபுரி &nbsp;மாவட்ட விவசாயிகளுக்கு தேவை யான நீர் கிடைக்கும். தற்போது பணிகள் பாதியில் &nbsp;நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயி கள் தண்ணீர் கிடைக்கும் என்ற &nbsp;நம்பிக்கையை இழந்து வருகின்ற னர். எனவே, விவசாயிகளின் வாழ் வாதரமாக விளங்கும் தூள் செட்டி ஏரி பாசன கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.