தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழில்நுட்ப கதிர்

3 Jul 2026, 7:49 pm
தொழில்நுட்ப கதிர்

வாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ வசதிக்கு தற்காலிக தடை!

வாட்ஸ்அப் தனது பயனர்களின் தனியுரி மையைப் பாதுகாக்கும் வகையில், மொபைல் எண்களைப் பகிராமல் ‘யூசர்நேம்’ (Username) மூலம் பிறரு டன் சாட் செய்யும் புதிய வசதியை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த வசதியை அறிமுகம் செய்யக் கூடாது என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது நாம் ஒருவருடன் வாட்ஸ்அப்பில் பேச வேண்டும் என் றால் நமது 10 இலக்க மொபைல் எண்ணை அவரிடம் பகிர வேண்டும். ஆனால், புதிய அப்டேட் படி இன்ஸ்டா கிராம் மற்றும் டெலிகிராம் போல நாம் ஒரு பிரத்யேக யூசர்நேமை உரு வாக்கிக் கொள்ளலாம். இதன் மூலம், முன்பின் தெரியாதவர்களிடம் நமது மொபைல் எண்ணைக் கொடுக்கா மல் வெறும் யூசர்நேமை மட்டும் கொடுத்து சாட் செய்ய முடியும். இந்த அம்சம் இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களை அதிகரிக்கக் கூடும் என்றும், குறிப்பாக சைபர் குற்றவாளிகள் அரசு அதிகாரிகள், பிர பலங்கள் அல்லது வங்கி நிறு வனங்களின் பெயர்களில் போலி யான யூசர்நேம்களை உருவாக்கி, பொதுமக்களை எளிதாக ஏமாற்ற வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால், இந்த வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தற்கா லிகத் தடை விதித்துள்ளது. மேலும், இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்க, மெட்டா நிறுவனத்திற்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த வாட்ஸ்அப், இந்த அம்சம் இன்னும் இந்தியாவில் முழுமையாக வரவில்லை. புதிய கணக்கை உருவாக்கவும் பயன்படு த்தவும் பயனர்களுக்குத் தொடர்ந்து மொபைல் எண் தேவைப்படும் என்றும், கூடுதல் தனியுரிமை அம்ச மாகவே யூசர்நேம் வசதி அறிமுகப் படுத்தப்படுகின்றன; ஆள்மாறா ட்டத்தைத் தடுக்க முன்னெச்சரிக்கை யாக பிரபலங்கள், அரசு அமைப்பு கள், முக்கிய பிரமுகர்களின் பெயர் களைப் போல யாரும் யூசர்நேம் உருவாக்க முடியாதபடி அந்த பெயர்களை முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

கூகுள் குரோம் - ஜெமினி ஏஐ-இல் புதிய வசதி!

கூகுள் நிறுவனம் தனது குரோம் டெஸ்க்டாப் உலாவியில் ஜெமினி ஏஐ மூலம் இயங்கும் ‘Select from Screen’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘Select from Screen’ என்ற அம்சம், திரையில் தெரியும் எந்தப் பகுதியையும் தேர்வு செய்ய அனுமதிக்கிறது. தேர்வு செய்யப்பட்ட தகவலை கூகுள் ஜெமினி ஏஐ கொண்டு ஆய்வு செய்து, அதன் சுருக்கம், விளக்கம், மொழிபெயர்ப்பு மற்றும் பயணர்கள் கேட்கும் கூடுதல் தகவல்களை உடனடியாக வழங்கும். இதன் மூலம், இணையப்பக்கத்தில் காணப்படும் எந்தவொரு உரை, படம் அல்லது தகவலையும் தனியாக நகலெடுக்காமல் நேரடியாகத் தேர்வு செய்து, அதைப் பற்றிய தகவல்களை பெற முடியும். இதை எப்படிப் பயன்படுத்துவது? 1) கூகுள் குரோம் உலாவியைத் திறந்து, மேலே இருக்கும் ‘Ask Gemini’ என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். 2) அங்குள்ள பிளஸ் (+) குறியீட்டை அழுத்தி, ‘Select from Screen’ வசதியைத் தேர்வு செய்யவும். 3) இணையப் பக்கத்தில் எந்தப் பகுதியைப் பற்றிக் கேட்க வேண்டுமோ, அதை சுற்றி ஒரு பாக்ஸ் (Box) வரைந்து தேர்வு செய்யவும். 4) அதன் பிறகு, கீழே உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில் உங்களது கேள்வியைக் கேட்டு ஜெமினியிடம் பதில் பெறலாம். இந்த அப்டேட்டைப் பெற பயனர்கள் தங்களது கூகுள் குரோம் உலாவியைப் அப்டேட் செய்து ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். தற்போது இந்த வசதி கூகுள் குரோமின் புதிய பதிப்புகள் மற்றும் ஜெமினி ஏஐ ஒருங்கிணைப்பு கொண்ட சாதனங்களில் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.