தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழில்நுட்ப கதிர்

30 Oct 2026, 8:44 pm
தொழில்நுட்ப கதிர்

வாட்ஸ் அப் குரூப் சாட்களில் 4 புதிய அம்சங்கள் அறிமுகம்!

வாட்ஸ் அப் குரூப் சாட்களில், காலவரையின்றி மெசேஜ்களை பின் செய்யும் வசதி, குரூப்ஸ் ஸ்டேட்டஸ் வசதி, குரூப்பில் இணையும் புதியஉறுப்பினர்களுடன் சாட் ஹிஸ்டரியைப் பகிரும் வசதி, படிக்காத மெசேஜ்களை பில்டர் செய்து பார்க்கும் வசதி ஆகிய அம்சங்கள் அறிமுகம்செய்யப்பட்டுள்ளன.

1. நிரந்தரமாக மெசேஜ்களை பின் செய்யும் வசதி (Permanent Message Pins):இதுவரை வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை பின் (Pin) செய்ய 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள்போன்ற காலவரையறைகள் மட்டுமேஇருந்தன. இனிமேல், குரூப்பில்வரும் முக்கியமான மெசேஜ்களை காலவரையறை இன்றி நிரந்தரமாக பின் செய்து வைத்துக்கொள்ளலாம்.

2. குரூப் ஸ்டேட்டஸ்வசதி (Group Status):தனிப்பட்ட நபர்களைத் தவிர்த்து, ஒரு குறிப்பிட்ட வாட்ஸ் அப் குரூப்உறுப்பினர்கள் மட்டும் பார்க்கக்கூ டிய வகையில் “Group Status” வசதிகொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் நண்பர்கள் அல்லது அலுவலகக் குழுவினருடன் மட்டும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களைப் பகிரும்வகையில் குரூப் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளலாம். வழக்கமான ஸ்டேட்டஸ் போலவே இதுவும்24 மணி நேரத்தில் மறைந்துவிடும்.

3. புதிய உறுப்பினர்களுடன் சாட் ஹிஸ்டரியைப் பகிர்தல் (Share Chat History):ஒரு குரூப்பில் புதிய உறுப்பினர் இணைந்த பிறகு, அவர்களுக்கு முந்தைய உரையாடல்களைப் புரிய வைப்பது சிரமமாக இருக்கும். புதிய அப்டேட் மூலம், புதிய உறுப்பினர் இணைந்த பின்னரும் கூட, குரூப்பில் உள்ள மற்றவர்கள் அவர்களின் பெயரைத் தொட்டு (Tap) சமீபத்திய சாட் ஹிஸ்டரியைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்ள முடியும்.

4. படிக்காத மெசேஜ்களை பில்டர்செய்யும்வசதி (Unread Mentions & Replies Filter): குரூப்களில் உங்களிடம் நேரடியாகக் கேட்கப்பட்ட கேள்விகள், உங்களுக்கு வந்த ரிப்ளைகள் மற்றும் ‘@all’ டேக் செய்யப்பட்ட முக்கியமான படிக்காத மெசேஜ்களை மட்டும் தனியாக வடிகட்டிப் (Filter) பார்க்க இந்த புதிய அம்சம்உதவும்.

ஜெமினி நோட்புக்கில் பாடநூல்கள் அம்சம்!

மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேலும் எளிதாக்கும் வகையில், கூகுள் நிறுவனம் தனது ஜெமினி நோட்புக் (முன்னதாக நோட்புக் எல்.எம் என அழைக்கப்பட்டது) செயலியில் புதிய “Textbooks” (பாடநூல்கள்) அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் OpenStax, Open Textbook Library மற்றும் S.Chand Publishing போன்ற புகழ்பெற்ற கல்வி வெளியீட்டாளர்களின் நூற்றுக்கணக்கான பாடநூல்களை, தங்களது நோட்புக்கில் நேரடியாக குறிப்பு ஆதாரங்களாக சேர்த்துக் கொள்ள முடியும். இதற்காக தனித்தனியாக இணையத்தில் புத்தகங்களைத் தேடி, பதிவிறக்கம் செய்து அப்லோட் செய்யும் சிரமம் இனி மாணவர்களுக்கு இருக்காது.

இந்த அம்சத்தைப் பயன்படுத்த முதலில் நோட்புக்கில் உள்ள “Add sources”-ஐ கிளிக் செய்து “Textbooks” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், தலைப்பு அல்லது கல்வி நிலைக்கு ஏற்ப உங்களது பாடப்புத்தகத்தைத் தேடி எளிதாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த புதிய அம்சம் தற்போது அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பயனர்களுக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. காப்புரிமைச் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, ஓப்பன் சோர்ஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இலவச மூலங்களிலிருந்து இந்த நூல்களை கூகுள் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் இந்த வசதி மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.