பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது?
3 Apr 2026, 5:30 am

பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது?

ஈரோடு/கரூர், ஏப். 2 - தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, 'தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜகவின் 'எவிள்' கூட்டணி வெற்றி பெற்றால், அது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கே ஆபத்தாக முடியும்' என்று எச்சரித்தார். ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் பாஜக - அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்தார். 'தன் மீதான ஊழல் புகார்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளில் இருந்து தப்பிக்க, ஒட்டுமொத்த கட்சியையும் பாஜகவிடம் பழனிசாமி அடகு வைத்து விட்டார். மீண்டும் இவரிடம் ஆட்சி சென்றால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தில்லியிடம் அடகு வைத்துவிடுவார்' என்று முதல்வர் சாடினார்.

தொடர்ந்து ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் நின்றபடி பேசிய அவர், அதிமுக-வின் ஒழுக்கக் கோட்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினார். 'பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பேசுவதற்குப் பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது?' என்று காட்டமாகக் கேட்ட அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் போது குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடித்தது அதிமுக அரசுதான் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஒன்றிய பாஜக அரசின் தமிழக எதிர்ப்புப் போக்கை விவரித்த முதலமைச்சர், 'கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சி, தமிழகத்திற்கு ஒரு சிறப்புத் திட்டத்தைக் கூட வழங்கவில்லை. மதுரை எய்ம்ஸ், சென்னை மெட்ரோ ரயில் நிதி மற்றும் பள்ளிக் கல்விக்கான நிதியை முடக்கி வைத்து தமிழகத்தைப் பழிவாங்குகிறார்கள்' என்று குறிப்பிட்டார்.

மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) நிறைவேற அதிமுக மற்றும் பாமக கட்சிகளின் ஆதரவே காரணம் என்றும், அந்தத் துரோகத்தால் சிறுபான்மையினருக்குப் பழனிசாமியின் கைகளில் படிந்துள்ளதாக முதல்வர் குற்றம்சாட்டினார்.