திருமூர்த்தி அணை பூங்காக்கள் பூட்டியே இருக்கும் மர்மம் என்ன?
26 Dec 2025, 4:32 pm
<p><strong>திருமூர்த்தி அணை பூங்காக்கள் பூட்டியே இருக்கும் மர்மம் என்ன?</strong></p>
<p>உடுமலை, டிச.26 - சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் திருமூர்த்தி அணைப் பகுதியில் இருக்கும் பூங்கா யாருக்கும் பயன்படாத வகையில் பூட்டி வைத்திருக்கும் மர்மம் தெரியாமல் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சுற் றுலாத் தலங்களில் தினமும் அதிக மக்கள் வரும் திருமூர்த்திமலையில் எவ்வித அடிப் படை வசதிகளும் இல்லை. அனைவருக்கும் பயன்படும் வகையில் வசதிகளை செய்ய மாவட்ட சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை தெரிவித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் அணையின் கரைப்பகுதியில் ஏற்கனவே இரண்டு பூங்கா இருந்தும் திறக் கப்படாத நிலையில், தற்போது வனத்துறை மற்றும் வனத்திற்குள் திருப்பூர் என்ற தன் னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், எத்தலப்பர் மணிமண்டபம் எதிரில் மரகதப் பூஞ்சோலை என்ற பெயரில் மூலிகை செடிக ளுக்கு மத்தியில் பூங்கா நடைமேடைகளுடன் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா தொடங்கப்பட்ட நாள் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரா மல் பூட்டியே உள்ளது. ஏற்கனவே இதே பகுதியில் இரண்டு பூங்காவும் பூட்டியே கிடக் கும் நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு பூங்கா இணைந்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு என்று கட்டப் பட்ட பூங்காவை திறக்காமல் பூட்டி வைத் துள்ளதன் காரணம் என்ன ? என்று தெரியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின் றனர். திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை திரு மூர்த்திமலை, அமராவதி அணையை சுற் றுலாப் பயணிகள் நலன் கருதி அடிப்படை வசதி செய்து பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.</p>
