“வந்தே மாதரம் வரலாறு எதற்கு உதவும்?”
11 Dec 2025, 3:52 pm
<p>“வந்தே மாதரம் வரலாறு எதற்கு உதவும்?”</p>
<p>வந்தே மாதரம் வரலாறு எதற்கு உதவும்? என நாடாளுமன்ற மாநி லங்களவையில் காங்கிரஸ் எம்.பி., ரஞ்ஜீத் ரஞ்சன் கேள்வி எழுப்பி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகை யில், “நாடாளுமன் றத்தில் வந்தே மாதரம் வரலாறு குறித்த விவா தம் நடத்துகிறார்கள். நாங்கள் நாடாளுமன்றத் துக்கு வரலாறு பாடம் கற்கவா வந்திருக்கிறோம்? காற்று மாசுபாட்டைக் குறைக்க இந்த வரலாறு உதவுமானால் கற்பியுங்கள். இன்று மக்கள் விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்; நான்கு மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சனைகளுக்கு பிரதமரின் ‘வந்தே மாதரம்’ உரையால் தீர்வு வருமா? தற்போதைய காற்று மாசுபாடு, விமான நிலைய பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை. ஆனால் தேவையற்றதை பேச பாஜகவினர் நாடாளுமன்றத்திற்கு வரு கிறார்கள்” என அவர் கூறினார்.</p>
