தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிமுகவின் நிலைப்பாடு என்ன? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி

17 Dec 2025, 4:11 pm
அதிமுகவின் நிலைப்பாடு என்ன? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி
<p>அ<strong>திமுகவின் நிலைப்பாடு என்ன? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி </strong></p> <p>சென்னை, டிச. 17 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒழித்துக் கட்டும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கையை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்காமல் இருப்பதாக முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னு டைய &lsquo;எக்ஸ்&rsquo; தளப் பதிவில், &ldquo;பச்சைத்துண்டு போட்டுக் கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் &nbsp;விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற &nbsp;ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சி அதிமுகவின் நிலைப்பாடு என்ன?&rdquo; &nbsp;என்று கேள்வி எழுப்பியுள்ளார். &ldquo;மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் &nbsp;சட்டம் போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆதரவு தரப் போகிறாரா பழனிசாமி&rdquo; என்றும் கேட்டுள்ளார். காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, திட்டத் திற்கு இந்தியில் பெயரிட்டிருப்பதாகவும், இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு இதை &nbsp;எதிர்க்க தயக்கம் காட்டுவது ஏன்? திட்டத்துக்கான நிபந்த னைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க, &nbsp;நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக ஏற்றுக்கொள்கிறதா? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். &nbsp;இவ்வளவு குனிந்து கும்பிடும் உங்கள் கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் எதற்கு, என்று நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்! என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.