தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முழுமையான - உண்மையான விடுதலை எது? - ச. லெனின்

8 Mar 2026, 3:42 pm
முழுமையான - உண்மையான விடுதலை எது? -  ச. லெனின்
<p><strong>முழுமையான - உண்மையான விடுதலை எது?</strong></p> <p>&lsquo;பெண்களின் செயலூக்கம் கொண்ட பங்களிப்பு இல்லா மல், பெரும் சமூக மாற்றங்கள் எதுவும் சாத்தியமில்லை. பெண்களின் சமூக நிலையைக் கொண்டே சமூக &nbsp;முன்னேற்றத்தைத் துல்லியமாக அளவிட முடியும்&rsquo; என்றார் மாமேதை மார்க்ஸ். சமூக &nbsp;எதார்த்தங்கள்தான் மார்க்சியத்தை வளர்த்தெடுத்தன. மார்க்ஸ் காலத்திய பெண்ணியக் கருத்துக்கள் மார்க்சியத்தின் உள்ளடக்கத்தைச் செழுமைப்படுத்த உதவின. வர்க்க உணர்வும் சுரண்டலும் ஆண் தொழிலாளி பொருளாதார ரீதியாக &nbsp;மட்டும் சுரண்டப்படுகிறார். ஆனால், பெண் &nbsp;தொழிலாளியோ பொருளாதார ரீதியாகவும், சமூக மற்றும் பாலியல் ரீதியாகவும் ஒடுக்கப்படு கிறார். இது குறித்து சோவியத் ரஷ்யாவின் முதல் பெண் சமூக நலத்துறை அமைச்சர் அலெக்சாண்ட்ரா கொலந்தாய் குறிப்பிடும்போது, &ldquo;பெண்கள் உழைப்பை விற்பவர் என்கிற முறை யில் சுரண்டப்படுவதோடு, பெண் என்கிற வகை யில் ஒடுக்கப்படுகிறார்கள்&rdquo; என்கிறார். அரசியல் உணர்வு பெறாத பெண்கள் மத்தியில் பணி யாற்றி, அவர்களை வர்க்க உணர்வு கொண்ட வர்களாக வளர்ப்பது கம்யூனிஸ்டுகளின் முதன்மைப் பணியாகும். போராட்டப் பாதையில் தனித்துவமான பணி முதலாளித்துவ பெண்ணியவாதத்திற்கும் சோசலிச பெண்ணியத்திற்கும் உள்ளடக்க ரீதியாகவே பெரிய வித்தியாசங்கள் உண்டு. முத லாளித்துவப் பெண்ணியவாதிகள், தங்களின் தந்தை, கணவர் மற்றும் சகோதரர்கள் அனு பவிக்கும் அதே சலுகைகளைத் தாங்களும் அடைய வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டுள்ளனர். ஆனால், உழைக்கும் மகளிரின் இலக்கோ, பிறப்பின் அடிப்படையிலோ அல்லது செல்வத்தின் அடிப்படையிலோ நிலவும் அனைத்துச் சலுகைகளையும் ஒழிப்பதே ஆகும். விடுதலையின் இலக்கு உழைக்கும் மக்களின் அரசைப் படைக்கும் மிகக் கடினமான பாதையை உள்ளடக்கியதே உழைக்கும் மகளிர் முன்வைக்கும் அரசியல் உரிமையாகும். சாதி, பாலினம் என ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரை அவர்களின் பிரத்தியேகக் கோரிக்கைகளுக்காக அணிதிரட்டுவதோடு, உழைக்கும் வர்க்கப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அதனை ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தையும் நாம் உள்வாங்க வேண்டும். பெண்களின் உரிமைகளை விரிவுபடுத்துவதற்கான இத்தகைய இடைவிடாத போராட்டங்களே, அவர்களின் முழுமையான மற்றும் உண்மையான விடுதலையை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.