தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுரங்கத்தில் சிக்கிய 9 பேரின் கதி என்ன ஆனது? 6 உடல்கள் மீட்பு ; 4ஆவது நாளாக நீடிக்கும் மீட்பு பணி

18 Nov 2025, 2:35 pm
சுரங்கத்தில் சிக்கிய 9 பேரின் கதி என்ன ஆனது? 6 உடல்கள் மீட்பு ; 4ஆவது நாளாக நீடிக்கும் மீட்பு பணி
<p><strong>சுரங்கத்தில் சிக்கிய 9 பேரின் கதி என்ன ஆனது? 6 உடல்கள் மீட்பு ; 4ஆவது நாளாக நீடிக்கும் மீட்பு பணி</strong></p> <p>லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத் தின் பில்லி மார்குந்தி சுரங்கப் பகுதியில் உள்ள கல்குவாரியில் சனிக்கிழமை மாலை சுமார் 4:30 மணி யளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. பெரிய பாறாங்கற்கள் சரிந்ததால் குவாரியின் ஒரு பகுதி இடிந்து விழுந்த தில் 15 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். திங்களன்று இரவு நில வரப்படி கல்குவாரியில் இருந்து பனாரி கிராமத்தைச் சேர்ந்த ராஜு சிங் (30), இந்திரஜித் (30), சந்தோஷ் யாதவ் (30), ரவீந்திரா (18), ராம்கேலவன் (32), &nbsp;கிருபாசங்கர் ஆகிய 6 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. &nbsp;இடிபாடுகளில் சிக்கியுள்ள 9 பேரின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. செவ்வாயன்றும் 4ஆவது நாளாக தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் காவல் துறைக் குழுக்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தகவல் இல்லை மிகப்பெரிய அளவில் விபத்து நிகழ்ந்த &nbsp;பொழுதிலும் சம்பவ இடத்தில் ஒன்றிய &nbsp;அரசு சார்பில் இன்னும் குழு அமைக்க வில்லை. சுரங்க மீட்புப் பணியை கோட்ட &nbsp;ஆணையர் ராஜேஷ் பிரகாஷ் நேரில் கண்காணித்து வருகிறார். இவர் சுரங்கத்தில் சிக்கியுள்ள 9 பேரின் நிலைமை குறித்து உறுதியான தகவல் அளிக்க மறுத்து வருகிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.