ஈரநிலம் - கு.மணி
13 Jun 2026, 7:25 pm

ஈரநிலம் - கு.மணி

பூமியின் கருப்பைக்குள் சுற்றிக் கிடக்கும் தொப்புள் கொடித் துண்டுகள்

பெயரறியா விதைகளின் ஆயுட்கால ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் மௌனக் களஞ்சியங்கள்

தாகத்தின் தழும்புகளை கடல் நீரால் கழுவி விட்டு சேற்றின் வாசனையில் மழை நீரைப் பருகி கிடக்கும் ஒரு பச்சைத் தவம்.....

இங்கேதான் காலத்தின் கால் தடங்கள் புதைந்து போகின்றன ஆனால்.....

நாகரிகத்தின் அடையாளங்கள் இந்த ஈர நிலத்தின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கின்றன

கான்கிரீட் கனவுகள் தாகத்தை அறிவதில்லை.... தாகம் தீர்க்கும் நீர் அல்ல - இது பூமியின் நரம்புகளில் பாய்ந்து கொண்டிருக்கும் பச்சை ரத்தம்!

ஈரநிலங்கள் காய்வது வெறும் நீர் வற்றுவது அல்ல பூமித்தாயின் ரத்த ஓட்டம் நின்று பிணமாக மாறுவதன் அடையாளம்....