தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆருக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட 27 லட்சம் பேரில் 70% பேர் முஸ்லிம்கள்

15 Jul 2026, 9:05 pm
எஸ்ஐஆருக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட 27 லட்சம் பேரில் 70% பேர் முஸ்லிம்கள்

எஸ்ஐஆருக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட 27 லட்சம் பேரில் 70% பேர் முஸ்லிம்கள்

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடை பெற்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் (எஸ்ஐஆர்) பிறகு சுமார் 27 லட்சம் பேரின் பெயர்கள் சந்தே கத்திற்குரியவை என்று சொல்லி, அவர்கள் மீது தேர்தல் ஆணையம் விசா ரணை நடத்தியது. தொடர்ந்து அவர்க ளின் வாக்குரிமை நிறுத்திவைக்கப் பட்டது.

சட்டமன்றத் தேர்தலில் 27 லட்சம் பேரும் வாக்களிக்கவில்லை. இந்நிலையில், வாக்குரிமை நிறுத்தி வைக்கப்பட்ட 27 லட்சம் பேரில் 70% பேர் முஸ்லிம்கள் என கொல்கத்தாவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக ‘சபர் இன்ஸ்டிடியூட்’ வெளியிட்டுள்ள அறிக் கையில்,”27 லட்சம் பேரில் 70% பேர் முஸ்லிம்கள். இதில் 51% பேர் பெண்கள். இவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாகக் கருதப்பட்டார்கள்.

இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய போது, நீங்கள் கொடுத்த தகவல்களில் சில குளறு படிகள் இருந்ததாக அதிகாரிகள் மழுப்பி னர். தங்கள் பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து, மக்கள் அரசு தீர்ப்பாயங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஆனால், தீர்ப்பாயம் இதுவரை மிகச் சிலருக்கு மட்டுமே மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம் கொடுத்துள்ளது. அதாவது வெறும் 1,607 பேருக்கு மட்டுமே. மற்ற வர்களுடைய விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் முஸ்லிம் மக்களை நீக்கவே எஸ்ஐஆரை தேர்தல் ஆணையம் மூலம் பாஜக செயல்படுத்தி வருகிறது என்பது ஆதாரத்துடன் மீண்டும் அம்பலமாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.