தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் முறைகேடு அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் கடும் எச்சரிக்கை

6 Jun 2026, 9:23 pm
மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் முறைகேடு அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் கடும் எச்சரிக்கை

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் முறைகேடு அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் கடும் எச்சரிக்கை

புதுதில்லி மேற்கு வங்க மாநி லத்தில் இந்தியத் தேர்தல் ஆணை யத்தின் ‘சிறப்பு தீவிரத் திருத்த’ (Special Intensive Revision - எஸ்ஐஆர்) நடைமுறை மூலம் வாக்காளர் பட்டியல்களில் பெரிய அளவில் முறைகேடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டின் தேர்தல் ஜனநாயகம் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் 181 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய ‘அரசியலமைப்பு நடத்தை குழு’ மற்றும் 70-க்கும் மேற்பட்ட சிவில் சமூகத்தினர் அடங்கிய ‘கூட்டாட்சி தேர்தல்க ளுக்கான குழு’ இணைந்து பொது அறிக்கை மூலம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களின் நம்பிக்கை சிதைப்பு

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,”இந்திய குடியரசின் வரலாற்றில் முன் னெப்போதும் இல்லாத வகை யில், தேர்தல் முறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இவ்வளவு கொடூரமாக, வெளிப்படையாக, இரக்கமற்ற முறையில் சிதைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஜனநாயக நம்பிக்கை யைப் பாதுகாக்க வேண்டிய அரசியலமைப்பு அமைப்புகளான இந்தியத் தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலில் கடுமையான செயல்பாட்டுக் குறைபாடுக ளையும், பொறுப்புத் துறப்பையும் வெளிப்படுத்தியுள்ளன. பல பத்தாண்டுகளாக வலுவான ஜனநாயக நடைமுறை கள் மூலம் கட்டியெழுப்பப்பட்ட இந்த ஜனநாயகம், தற்போதைய தேர்தல் ஆணையத்தின் தன்னிச் சையான போக்கினால் சீர்குலைக் கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தனக்குள்ள அரசியல மைப்பு அதிகாரத்தைப் பயன் படுத்தி, எந்தவொரு சட்டப்பூர்வ மான ஆதாரமும் அவசியமும் இன்றி, வாக்காளர் பட்டியல்களில் பெரிய அளவிலான நீக்கங்க ளைச் செய்ய ‘சிறப்பு தீவிரத் திருத்த’ (எஸ்ஐஆர்) முறையைக் கொண்டு வந்தது. இதனை உச்ச நீதிமன்றம் சட்டப்பூர்வமாக்கியது. இதன்மூலம் உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமை என்ற அடிப்படை தத்துவமே திட்டமிட்டு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமானது.

எதிராக வாக்களிப்பவர்களை நீக்கவே...

எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் உள்ள தரவுகளில் “தர்க்கரீதியான முரண்பாடுக ளை” (logical discrepancies) கண்டறிய தன்னிச்சையான வழி முறையைப் பயன்படுத்தியதற்கு தேர்தல் ஆணையத்திடம் எந்த விளக்கமும் இல்லை. இதன்மூலம் மில்லியன் கணக்கான குடிமக்க ளின் வாக்குரிமை பறிக்கப் பட்டுள்ளது. வாக்காளர்களாக தங்களைப் பதிவு செய்து கொள்வதற்கும், தங்களின் அடையாளத்தை நிரூபிப்பதற்கும் முழுப் பொறுப் பும் குடிமக்கள் மீதே சுமத்தப் பட்டது. ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இருந்தவர்களிடமே, அவர்கள் எளிதில் பெற முடியாத ஆவணங்களைக் கேட்டு தேர்தல் ஆணையம் வற்புறுத்தியது. “வாக்காளர் பட்டியல் தூய்மைப் படுத்துதல்” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவ டிக்கை ஒரு கட்சியிடமிருந்து ஒரு குறிப்பிட்ட ஆதிக்க மற்றும் பெரும் பான்மைவாத சக்திக்கு அதிகா ரத்தை மாற்றுவதற்காக, தங்க ளுக்கு எதிராக வாக்களிக்கக் கூடியவர்களை பெருமளவில் நீக்குவதற்காகவே திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

ஏமாற்று வேலை

மேற்கு வங்கத்தில் மட்டும் 90 லட்சம் தகுதியான வாக்கா ளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர். இதில் ஆவணக் குறைபாடுகள் என்ற பெயரில் நீக்கப்பட்ட 27 லட்சம் பேர் உயிரு டன் இருக்கும் தகுதியான குடி மக்கள் என்பது சரிபார்ப்பில் தெரிய வந்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், தகுதியான குடிமக்களுக்கு வாக்கு ரிமை மறுக்கப்பட்டதால், இந்தத் தேர்தல் ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் ஏமாற்று வேலை என்றுதான் கூற வேண்டும்.

10 கோடியை எட்டும்

மேற்கு வங்கத்தைத் தொ டர்ந்து, இந்த எஸ்ஆர் நடவ டிக்கை நாட்டின் பிற பகுதிக ளிலும் தொடர்கிறது. நாடு முழுவ தும் இதுவரை சுமார் 5.9 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 10 கோடியை எட்டக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதில் பெண்கள், முஸ்லிம் சமூ கத்தினர் இலக்கு வைக்கப்பட்டு நீக்கப்படுவது, எதிர்காலத் தேர்தல் களையே ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிடும்.

நீதிமன்றத்தின் மவுனம்

தேர்தல் ஆணையத்தின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை யைத் தடுத்திருக்க வேண்டிய ஒரே அமைப்பான உச்சநீதிமன்றம், மற்றொரு அரசியலமைப்பு அமைப்பின் செயல்பாடுகளில் தலையிட விரும்பவில்லை என்று கூறி இந்த விவகாரத்தை அலட்சியப்படுத்தியது அதிர்ச்சி யளிக்கிறது. குடிமக்களின் அரசி யலமைப்பு உரிமைகள், ஒரு குறிப்பிட்ட அமைப்பின் தன்னா திக்கத்தை விட முக்கியமானது என் பதை நீதிமன்றம் மறந்துவிட்டது. இதன்மூலம், தேர்தல் ஆணையம் நடுநிலையான அமைப்பாக இல்லாமல், ஆளும் அரசுக்குச் சாதகமான வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு கருவி யாக மாறிவிட்டது என்பது அம்பலமாகியுள்ளது.

மக்கள் இயக்கத்திற்கான அழைப்பு

அரசியலமைப்பை பாதுகாக்க, நாட்டின் இறையாண்மையைக் கொண்டுள்ள மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என அழைப்பு விடுத்தது சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கி றோம். 1. எஸ்ஐஆர் முறையில் தற்போ தைய டிஜிட்டல் முறையை விடுத்து, தேர்தல் ஆணை யத்தின் கையேட்டின்படி வீடு வீடாகச் சென்று நேரடி சரிபார்ப்பு நடத்த வேண்டும்.

2. ஏற்கெனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளை மறு வடிவமைப்பு செய்து, திருத்தங்க ளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

3. நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க கிராம சபை, வார்டு அளவில் நேரடி தணிக்கை நடத்தப்பட வேண்டும்.

4. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு மூலம் வெளிப் படையான முறையில் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும்.

5. மக்கள் தொகை கணக்கெ டுப்பு அல்லது தொகுதி மறுவரை யறைக்காகக் காத்திருக்காமல், உடனடியாக 33% மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். மேலும் இதர பிற்படுத் தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நிதி உதவி வழங்கப்பட வேண்டும்.

6. வாக்காளர்கள் தங்கள் வாக்கு யாருக்குப் பதிவானது என்பதை விவிபேட் சீட்டு மூலம் நேரடியா கக் கையில் பெற்று, பின்னர் அதனை வாக்குப்பெட்டியில் போடும் வகையில் முறை மாற் றப்பட வேண்டும். 100% விவி பேட் சீட்டுகளும் எண்ணப்பட வேண்டும்” என அறிக்கையில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.