தீக்கதிர் முக்கிய செய்திகள்
6 May 2026, 8:23 pm

பத்திரிகையாளர் முகமது ஜுபைர்

மேற்கு வங்கத்தில் உள்ள 49 தொகுதிகளில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தது. நீதிமன்றம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி ஜாய்மால்ய பக்சி தெரிவித்த கருத்தின் பின்னணியில், இத்தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.

சமூக செயல்பாட்டாளர் பரஞ்சோய் குஹா

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான தரவுகளை ஆராய்ந்து பார்க்கையில் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற அது உதவியுள்ளது தெரிய வந்துள்ளது.

பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர்

மார்ச் மாதத்தில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு கணிசமாக உயர்ந்திருந்தாலும், 3.9 சதவீதமாக இருந்த விலை தள்ளுபடி தற்போது 2.5 சதவீத விலை உயர்வாக மாறியுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

திரிணாமுல் எம்.பி., மஹூவா மொய்த்ரா

இன்று மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மூலையிலும் வன்முறை, ரவுடித்தனங்கள், மதவாத முழக்கங்கள், பதவியேற்புக்கு முன்பே ஒலிக்கும் வெறுப்புப் பேச்சுகள் அரங்கேறிவருகின்றன.