தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்கத்தில் தீவிரமடையும் வன்முறை : எதிர்க்கட்சித் தலைவரின் உதவியாளர் சுட்டுக்கொலை முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம்

7 May 2026, 8:48 pm
மேற்கு வங்கத்தில் தீவிரமடையும் வன்முறை : எதிர்க்கட்சித் தலைவரின் உதவியாளர் சுட்டுக்கொலை முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம்

மேற்கு வங்கத்தில் தீவிரமடையும் வன்முறை : எதிர்க்கட்சித் தலைவரின் உதவியாளர் சுட்டுக்கொலை முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம்

மேற்கு வங்க மாநி லத்தில் மே 4 அன்று சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அங்கு தொடர்ந்து வன் முறைச் சம்பவங்கள் அரங் கேறி வருகின்றன. திரிணா முல் காங்கிரஸ் - பாஜக இடை யே நடந்து வரும் இந்த வன்முறைச் சம்பவங்களால், மணிப்பூர் மாநிலம் போல மேற்கு வங்கம் காட்சிய ளிக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் - பாஜகவின் அட்டூழியத்தால் மாநிலம் முழுவதும் கடந்த 4 நாட்களில் 6 பேர் வரை உயிரி ழந்துள்ளனர். 30க்கும் மேற்பட் டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்ப தால் பலி எண்ணிக்கை அதி கரிக்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. குறிப்பாக, முர்ஷிதா பாத் மாவட்டத்தில் மாமேதை லெனின் சிலையை பாஜக கு ண்டர்கள் அடித்து நொறுக்கி னர். இதற்கு சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிகள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த வன்முறைச் சம்ப வங்கள் தொடர்பாக 200க்கும் அதிகமான எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 433 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.1,100 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர் என மேற்கு வங்க டிஜிபி சித் நாத் குப்தா கூறி யுள்ளார். ஆனாலும் இன்னும் வன்முறைச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், 4ஆவது நாளான வியாழனன்றும் மேற்கு வங்கத்தில் வன்முறைச் சம்பவங்கள் நீடித்து வரு கின்றன. புதனன்று நள்ளிரவு எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரியின் (பாஜக) நெருங்கிய உதவியா ளரான சந்திரநாத் ரத் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார். மத்தியம்கிராம் பகுதியில் உள்ள தோஹாரி யா என்ற இடத்தில் சந்திரநாத் ரத் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது கார், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வழி மறித்து, சந்திரநாத் ரத் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, வியாழனன்று வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பனிஹாட்டியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக மாறி, மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் அச்சத்தில் பொ ழுதை கழித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.