தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்குவங்க எஸ்ஐஆர் குளறுபடி : ஜார்க்கண்ட், ஒடிசா மாநில நீதிபதிகளை நியமிக்க உத்தரவு

24 Feb 2026, 3:55 pm
மேற்குவங்க எஸ்ஐஆர் குளறுபடி : ஜார்க்கண்ட்,  ஒடிசா மாநில நீதிபதிகளை நியமிக்க உத்தரவு
<p><strong>மேற்குவங்க எஸ்ஐஆர் குளறுபடி : ஜார்க்கண்ட், &nbsp;ஒடிசா மாநில நீதிபதிகளை நியமிக்க உத்தரவு</strong></p> <p>புதுதில்லி, பிப். 24 - மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் &nbsp;வாக்காளர் சிறப்பு தீவிர பட்டியல் திருத்த (எஸ்ஐஆர்) குளறுபடி தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கும் - அம்மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருதரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. உச்சநீதிமன்றத்திலும் இதே நிலை நீடித்து வருகிறது. இதனால் கடந்த வாரம், உச்சநீதிமன்றம் மேற்கு வங்கத்தில் மாவட்ட நீதிபதிகள், கூடுதல் மாவட்ட நீதிபதிகளை எஸ்ஐஆர் பணிக்காக பணிய மர்த்த நீதிமன்றம் உத்தரவிட்டது. &nbsp;இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியது. &nbsp;அந்த கடிதத்தில், &ldquo;50 லட்சம் பேருடைய முறையீடுகள் நிலுவையில் உள்ளன. ஆனால் மொத்தம் 250 நீதித்துறை அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர். ஒரு நீதிபதி ஒரு நாளைக்கு 250 வழக்குகளுக்கு முடிவை தீர்மானித்தாலும், அனைத்தையும் முடிக்க குறைந்தது 80 நாட்கள் ஆகும். சுமார் 80 லட்சம் &nbsp;முரண்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத மனுக்கள் சரிபார்க்கப்பட வேண்டியுள்ளது. நிலைமை மோசமாகலாம்&rdquo; என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அவசர அமர்வை செவ்வாயன்று கூட்டியது. &nbsp;தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையி லான சிறப்பு அமர்வு, &ldquo;எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம் குறித்த காலத்திற்குள் முடிப்பதற்கு ஏதுவாக, கூடுதல் நீதித்து றை அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்காக அண்டை மாநிலங் களான ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து நீதிபதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த அதிகாரிகளின் பயணம் மற்றும் தங்குமிடச் செலவுகளை தேர்தல் ஆணையம் ஏற்கும்&rdquo; என கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 142 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட பிப்ரவரி 28 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சரிபார்ப்பு முழுமையடையா விட்டால் அதன் பிறகு கூடுதல் பட்டியல்களைத் தொடர்ந்து வெளியிடலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.