முந்தய பக்கம்

மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

2 May 2026, 12:15 pm
மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!
<p>மேற்கு வங்கத்திந் 2 மாவட்டங்களில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.</p><p>மேற்கு வங்கத்தில், சட்டமன்ற தேர்தல் இரு கட்டங்களாக ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சூழலில் 2 மாவட்டங்களில் தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் நடைந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக மகர்ஹாட் மேற்கு தொகுதியில் உள்ள 11 வாக்குச்சாவடிகள், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் உள்ள 4 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. </p><p>இதை தொடர்ந்து, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 11 மணி நிலவரப்படி, மகர்ஹாட் மேற்கு தொகுதியில் 38.2% வாக்குகளும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 35.92% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram