தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்கம் : ரத்தக் கறையோடு அரங்கேறும் அதிகார மாற்றம் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீதான பாசிச பாஜகவின் திட்டமிட்ட வேட்டை

6 May 2026, 10:16 pm
மேற்கு வங்கம் : ரத்தக் கறையோடு அரங்கேறும் அதிகார மாற்றம் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீதான பாசிச பாஜகவின் திட்டமிட்ட வேட்டை

மேற்கு வங்கம் : ரத்தக் கறையோடு அரங்கேறும் அதிகார மாற்றம் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீதான பாசிச பாஜகவின் திட்டமிட்ட வேட்டை

கொல்கத்தா, மே 6 - இந்திய ஜனநாயக நாட்டின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன் றான மேற்கு வங்கத்தில், 2026-ஆம் ஆண்டு மே மாதம் ஒரு கறுப்பு அத்தி யாயமாகப் பதியப்பட்டு வருகிறது.

34 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சி 2011-இல் வீழ்ந்தபோது, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எத்தகைய வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டதோ, அதையும் மிஞ்சும் வகையிலான ஒரு பாசிசத் தாக்குத லை இன்று பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்து வருகிறது.

அன்று மம்தா பானர்ஜி இடதுசாரி ஊழியர் களை வேட்டையாடினார்; இன்று அதே இடதுசாரிகளையும், மம்தாவின் கட்சி யினரையும் சேர்த்து ஆர்.எஸ்.எஸ்-சின் அரசியல் பிரிவான பாஜக தனது சித்தா ந்தப் பகை உணர்வோடு குறிவைத் துள்ளது.

குறிப்பாக இடதுசாரிகளுக்கு எதி ரான வன்முறை என்பது தற்செயலான தேர்தல் மோதல் அல்ல.

இது இந்திய அரசியலமைப்பிலிருந்து இடதுசாரிச் சிந்தனைகளையும், ஜனநாயகக் குரல்களையும் முற்றிலுமாகத் துடைத் தெறிய முனையும் ஒரு திட்டமிட்ட ‘அர சியல் அழிப்பு’ நடவடிக்கை ஆகும்.

2026 தேர்தல் முடிவுகள் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடை பெற்ற மேற்கு வங்கச் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், மே 4 அன்று மாநிலத்தின் அரசியல் வரைபட த்தையே மாற்றியமைத்தன.

294 இடங்களைக் கொண்ட சட்டப்பேர வையில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி மிருக பலத்துடன் ஆட்சி யைப் பிடித்துள்ளது.

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

இடது முன்னணி 2 இடங்களைப் பிடித்தது. கேரளத்திலும் இடதுசாரி அரசு தோல்வியடைந்த நிலையில், இந்த வெற்றியைக் கொண்டாடிய பிரதமர் மோடி, “இந்த நாட்டில் இனி கம்யூ னிஸ்ட் அரசாங்கம் என்று எதுவுமே இல்லை” என்று கொக்கரித்தார்.

இது ஒரு பிரதமரின் தேர்தல் வெற்றிக் கூற்று மட்டுமல்ல; இது இந்தியாவி லிருந்து ஒரு சித்தாந்தத்தை அப்புறப் படுத்துவிட்டோம் என்ற பாசிச மமதையின் வெளிப்பாடு.

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி யை இழந்த நிலையில், 1977-க்குப் பிறகு முதல்முறையாக இந்திய மாநி லங்கள் எதிலும் இடதுசாரி ஆட்சி இல்லை என்ற சூழலை பாஜக தனது வன்முறைக்கான உரிமமாக எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

நிர்வாக வெற்றிடமும் திட்டமிட்ட வன்முறையும் மம்தா பானர்ஜி தனது தோல்வி யை ஒப்புக்கொள்ள மறுத்து, ராஜினா மா செய்யாமல் இருப்பது ஒருபுறம் அர சியலமைப்புச் சிக்கலை ஏற்படுத்தி னாலும், மறுபுறம் மாநில நிர்வாகத் தில் ஒரு பெரும் வெற்றிடத்தை உரு வாக்கியுள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாஜகவின் குண்டர்படைகள் மாநிலம் முழுவதும் இடதுசாரி ஊழியர்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் வீடுகளையும், அலு வலகங்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றன.

தேர்தல் ஆணையம் சுமார் 500 கம்பெனி மத்தியப் படைகளை தொட ர்ந்து அங்கு நீட்டிக்கச் செய்துள்ள நிலையில், அதை பாஜக குண்டர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்து கின்றனர்.

கிராமப்புறங்களில் எதிர்க் கட்சி ஊழியர்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மாவட்ட வாரியான வன்முறைப் பதிவுகள் மேற்கு வங்கத்தின் மூலை முடுக்கெங்கும் பாஜகவினர் நிகழ்த்தி

தோழர் லெனின் சிலை உடைப்பு - கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்!

மேற்கு வங்கத்தில் பாஜக-வினர் நடத்திவரும் வன்முறை வெறியாட்டங்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை யில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: பாஜக குண்டர்கள் கொடூரத் தாக்குதல் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எஸ்ஐஆர் செயல்முறை வாயிலாக பாஜக முறைகேடாக வெற்றி பெற்றதை யொட்டி, அம்மாநிலத்தில் பாஜக குண்டர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் அலுவலகங்கள், கொடிக் கம்பங்கள், தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள- உலகத் தொழி லாளர்களின் ஒப்பற்ற தலைவர் மாமேதை தோழர் லெனின் சிலையை உடைத்துள்ளனர்.

திரிபுராவிலும் வெறியாட்டம் அதேபோன்று, திரிபுரா மாநிலத்தி லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாஜக குண்டர்களின் இந்த அராஜக வன்முறைத் தாக்குதல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பாசிச சக்திகள் லெனின் சிலை யை சேதப்படுத்தினாலும் அவரது சித்தாந்தத்தை ஒருபோதும் அழிக்க முடியாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஜனநாயக சக்திகள் கண்டிக்க வேண்டும் தோழர் லெனின் சிலையை உடைத்து, எதிர்கட்சி அலுவலகங் களையும், தோழர்களையும் தாக்கி வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாஜக குண்டர்களை அம்மாநில காவல்துறை உடனடியாக கைது செய்து அமைதியை ஏற்படுத்திட வேண்டுமெனவும், பாஜகவினரின் இந்த அராஜக வன்முறை வெறி யாட்டங்களை கண்டித்து ஜனநாயக சக்திகள் தங்களது வலுவான கண்ட னக் குரலை எழுப்பிட வேண்டு மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.வரும் அத்துமீறல்கள் மாவட்ட வாரி யாக இங்கே தொகுக்கப்பட்டுள்ளன: 1.

முர்ஷிதாபாத் மற்றும் ஹவுரா முர்ஷிதாபாத் மாவட்டத்தின் டொம்கல் நகராட்சியில் (வார்டு 19), சிபிஐ(எம்) ஊழியர் ஷபிகுல் இஸ்லாம் தனது கோழிப் பண்ணையிலிருந்து வீடு திரும்பும்போது மர்ம நபர் களால் சுடப்பட்டார்.

இடதுசாரி ஊழி யர்களுக்கு எதிராக மீண்டும் துப்பாக்கி களைப் பயன்படுத்துவது என்பது வங்காள அரசியலில் ஒரு புதிய மற்றும் அபாயகரமான போக்கைக் குறிக்கிறது ஹவுராவின் உதயநாராயண்பூர் பகுதி யில் பாஜக ஆதரவாளர் யாதவ் பார் கொல்லப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அதற்குப் பதிலடியாக அந்தப் பகுதியில் இருந்த இடதுசாரி மற்றும் திரிணாமுல் ஆதரவாளர்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. 2. கொல்கத்தா மற்றும் புறநகர் பகுதிகள் தேசிய அளவில் பாஜக நடத்தி வரும் ‘புல்டோசர் கலாச்சாரம்’ இப்போது கொல்கத்தாவின் நியூ மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

பாஜக கொடியுடன் வந்த புல்டோசர்கள் தெரு வோர வியாபாரிகளையும் பொது மக்க ளையும் மிரட்டியதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துள்ளன.

ராஜர்ஹாட் பகுதியில் பாஜக தொண்டர் மது மண்டல் கொல்லப்பட்டதாக தகவல் பரவியதைத்தொடர்ந்து, அந்தப்பகுதியிலும் இருந்த இடதுசாரி மற்றும் திரிணாமுல் ஆதரவாளர்களின் வீடுகள் முற்றிலும் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. 3. பங்குரா மற்றும் சிலிகுரி: அலுவலகங்கள் ஆக்கிரமிப்பு பங்குராவில் திரிணாமுல் மற்றும் இடதுசாரி கட்சி அலுவலகங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டு, அங்கு பாஜக கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக, கல்லூரிகளில் இருந்த மாணவர் பேரவை அறைகளை ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி சட்டவிரோதமாக ஆக்கிர மித்துள்ளது. சிலிகுரியில் திரிணா முல் கட்சி அலுவலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது; இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

திரிணாமுல் மீதான தாக்குதல்கள் — ஜனநாயகத்தின் சிதைவு பாஜகவின் ‘வெற்றி வெறி’ இடதுசாரிகளைத் தாண்டி, பதவியி லிருந்து இறங்கும் திரிணாமுல் காங்கிரஸ் மீதும் பாய்ந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான சில மணிநேரங்களிலேயே மாநிலம் முழு வதும் திரிணாமுல் அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டன: அசான்சோல் மற்றும் கானிங்: அசான்சோலின் கோதுலி பகுதியில் இருந்த திரிணாமுல் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு, அங்கிருந்த தளவாடங்கள் மற்றும் கொடிகள் எரிக்கப்பட்டன.

கானிங் பகுதியில் திரிணாமுல் அலுவலகத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகக் கூறி, அந்த அலுவலகம் பாஜகவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

பாலி மற்றும் ஹவுரா: ஹவுராவின் டும்ருர்ஜலாவில் இருந்த திரிணாமுல் அலுவலகத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, கட்சிப் பொருட்கள் வீதியில் வீசப்பட்டுள்ளன. முக்கியத் தலைவர்கள் மீதான தாக்குதல்: தின்ஹாட்டா டவுன் பிளாக் தலைவர் பிஷு தர், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பாஜகவின ரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

உதய நாராயண்பூர் தொகுதியின் திரிணா முல் வேட்பாளர் சமீர் பஞ்சா, பாஜக கும்பலால் ஆடை கிழிக்கப்பட்டுத் தாக்கப்பட்டார்.

காவி மயம்: கொல்கத்தாவின் டோலிகஞ்ச், கஸ்பா, காமர்காட்டி மற்றும் பஹரம்பூர் ஆகிய இடங்களில் இருந்த திரிணாமுல் அலுவலகங்கள் ஒரே இரவில் காவி வண்ணம் பூசப் பட்டு, பாஜக அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மம்தாவின் வன்முறையும் பாஜகவின் வேட்டையும் 2011-இல் மம்தா பானர்ஜி இடதுசாரி களுக்கு எதிராக நடத்திய வன்முறை வெறியாட்டம் என்பது ஒரு பிராந்தி யக் கட்சியின் அதிகாரக் கைப்பற்றல் மற்றும் அரசியல் பழிவாங்கல் நட வடிக்கையாக இருந்தது.

கம்யூனிஸ்டு களை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இருந்தது.

இன்று பாஜக நடத்துவது ஒரு ‘சித்தாந்தப் போர்’. ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தம் கம்யூ னிஸ்ட்டுகளைத் தங்களின் முதல் எதிரி யாகக் கருதுகிறது.

எனவே, கம்யூ னிஸ்ட்டுகளை முற்றாக அழிக்க வேண்டும் என முனைகிறது; அதே வேளை திரிணாமுல்லை ஒடுக்கி வைக்க எண்ணுகிறது.

ஒன்றிய அரசின் முழு அதிகார பலம், ஆளுநர் மாளிகையின் மறைமுக ஆதரவு, மற்றும் ஏகாதிபத்திய ஊட கங்களின் மவுனம் ஆகியவற்றின் பின்ன ணியில் இந்த வன்முறை அரங்கேறு கிறது.

மேற்கு வங்கத்தின் கலாச்சார அடையாளங்களைச் சிதைத்து, அங்கு ஒரு மதவாதப் பாசிசக் கட்டமைப்பை உருவாக்குவதே இவர் களின் நோக்கம்.

‘லெனின்’ சிலை யிலிருந்து ‘மார்க்சிய’ நூலகங்கள் வரை அனைத்தும் இவர்களின் தாக்கு தல் இலக்குகளாக உள்ளன.

ரத்தத்தில் மலராத அதிகாரம் அதிகார மமதையில் பாஜகவினர் செய்யும் இந்த வன்முறைகளை கம்யூ னிஸ்டுகள் தீரத்துடன் எதிர்கொள் வார்கள்.

வங்காளத்தின் மண் புரட்சிகர மான சிந்தனைகளால் ஆனது.

15 ஆண்டுகால மம்தாவின் ஒடுக்குமுறை யை தாங்கி நின்று இன்று மீண்டும் களத்தில் நிற்கும் இடதுசாரிப் போரா ளிகள், இந்தப் பாசிச இருளையும் கடந்து வருவார்கள் என்பது திண்ணம். பிரதமர் மோடி கம்யூனிசம் அழிந்து விட்டதாகக் கூறலாம், ஆனால் உழை க்கும் மக்களின் வயிற்றுப்பசியும், சுரண்டலுக்கு எதிரான கோபமும் இருக்கும் வரை செங்கொடிகள் வங்காளத்தின் வீதிகளில் மீண்டும் பறக்கும்.

வரலாறு சர்வாதிகாரிகளை ஒருபோதும் மன்னித்ததில்லை; அது போராட்டக்காரர்களையே எப்போதும் முன்னிறுத்துகிறது.

தகவல் ஆதாரங்கள் : கணசக்தி, தி வயர், பிசினஸ் ஸ்டாண்டர்ட், டெக்கான் ஹெரால்டு, தி பிரிண்ட், ஸ்க்ரோல், சங்கபாத் பிரதிதின், தேஷ் ரூபாந்தர் பி.டி.ஐ & ஏ.என்.ஐ.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.