மேற்கு வங்க அரசியலில் வன்முறையும் ஊழல் களங்கமும்
18 Aug 2026, 9:41 pm

மேற்கு வங்க அரசியலில் வன்முறையும் ஊழல் களங்கமும்

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹட் பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஐந்து முறை எம்.எல்.ஏ-வும்,முன்னாள் அமைச்சருமான ஆஷிஷ் பானர்ஜி தனது கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் எந்தவித ஊழலிலும் ஈடுபடவில்லை என்று அவர் தனதுகுறிப்பில்மறுத்துள்ள போதிலும், கடந்த மே 4-ஆம்தேதிக்குப் பிந்தைய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு மேற்கு வங்க அரசியலில் நிலவும்பதற்றமான சூழலையும், வன்முறைக் கலாச்சாரத்தையும் இந்தச் சம்பவம் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மாநிலத்தில் புதிதாக பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும்ஊழல்கள் குறித்த விவகாரங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மிரட்டி பணம் பறித்த புகார்கள்மற்றும் கைது நடவடிக்கைகள் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை விடுத்து, அரசியல் எதிரிகளை ஒடுக்குவதிலும் பழிவாங்கும் படலங்களிலும்கட்சிகள், குறிப்பாக பாஜக குறியாக இருக்கிறது. குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவது நீதிமன்றங்களின்பணியாக இருக்க வேண்டுமே தவிர, கும்பல் வன்முறைகளும் சட்டத்தைக் கையில் எடுக்கும் அத்துமீறல்களும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும். ஊழல் களங்கங்களைச் சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் “ஊழல் பாஜக” நடத்தும் அரசியல் நாடகங்கள் மக்களின்கவனத்தைத் திசைதிருப்புவதற்கே பயன்படுகின்றன. சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய ஜனநாயக அமைப்புகள், அதிகாரப் போட்டிகளிலும் பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் மூழ்கியிருப்பது மாநிலத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.

பாஜக- திரிணாமுல் இடையிலான இந்த மோதல் பாதிக்கப்படுவது உழைக்கும் எளிய மக்கள்தான். மேற்கு வங்க அரசியலில்மலிந்துவரும் வன்முறை அரசியலை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி, உழைக்கும் மக்களின் உண்மையான நலனுக்காகவும் வெளிப்படையான நிர்வாகத்திற்காகவும் இடது முன்னணி வலுவாக குரல் எழுப்பியுள்ளது.

அரசியல் களத்தில் நிலவும் அதிகாரப் போட்டிகளும், பழிவாங்கும் படலங்களும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைத் தீவிரமாகப் பாதித்துள்ளன. சாமானிய மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ள சூழலில், அங்கு வன்முறை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகும்.