தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்க மதரஸா ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை

13 Jul 2026, 9:22 pm
மேற்கு வங்க மதரஸா ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை

மேற்கு வங்க மதரஸா ஆசிரியர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை

உச்சநீதிமன்றம் தள்ளுபடி

புதுதில்லி மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு மதர ஸாக்களில் (இஸ்லா மியக் கல்வி நிலையம்) பணியாற்றி வரும் 361 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்க ளின் பணி நிரந்தரக் கோரிக்கை யை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேற்கு வங்க மதரஸா சேவை ஆணையச் சட்டம், 2008-இன் கீழ் தங்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் மாநில அரசின் மானிய உதவித் திட்டத்தின் கீழ் ஊதியம் பெறத் தகுதியுடைய வர்கள் என்றும் கூறி, 361 பணியா ளர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ரிட் மனுக்கள் திங்களன்று நீதிபதிகள் திபாங்கர் தத்தா, ஏ.ஜி.மசீஹ் ஆகியோர் அட ங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மனுதாரர்கள் தங்கள் தரப்பு நியா யத்தை நிரூபிக்கத் தவறிவிட்டனர். மனுக்களில் எந்தவிதமான அடிப்ப டை தகுதியும் இல்லை. பணியா ளர்கள் நியமிக்கப்பட்டதாகக் கூறும் தேதிகளில், அந்தந்த மத ரஸாக்களுக்கு மேற்கு வங்க மதரஸா கல்வி வாரியத்திடமிருந்து உரிய அங்கீகாரம் இருந்ததா? பணியாளர்கள் நியமிக்கப்பட்ட மதரஸாக்களின் நிர்வாகக் குழுக்கள், கல்வி வாரியத்தின் விதி களின்படி முறையாக அமைக்கப் பட்டிருந்தனவா? 361 மனுதாரர்க ளில் 13 பேரின் விவரங்களை மட்டும் மாதிரி அடிப்படையில் பரிசீலிக்கிறோம். அந்த 13 பேரில் ஒருவர், வழக்கைத் தொடர எங்க ளைச் சம்மதிக்க வைத்தால், மற்ற வழக்குகளின் கோரிக்கைகளைப் பரிசீலிப்போம் என்ற அடிப்படை யில் நாங்கள் செயல்பட்டோம். துரதிர்ஷ்டவசமாக, அந்த 13 பேரில் எவராலும் எங்களைச் சம்மதிக்க வைக்க முடியவில்லை. அனைத்து ரிட் மனுக்களும் தகுதியற்றவை, எனவே இந்த வழக்கை தள்ளு படி செய்கிறோம்” என உத்தர விட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.