பாஜக அரசைக் கண்டித்து மே.வங்கத்தில் தீவிரமடையும் போராட்டம்
7 Jun 2026, 9:36 pm
<p><strong>பாஜக அரசைக் கண்டித்து மே.வங்கத்தில் தீவிரமடையும் போராட்டம்</strong></p><p>கடந்த சில வாரங்களாக, மேற்கு வங்க ‘இரட்டை இன்ஜின்’ அரசின் ஏழை எளிய மக்களுக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி தொடர்ச்சியாக தெருக்களில் இறங்கிப் போராடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாரசாத்தில் மாபெரும் போராட்டப் பேரணி நடைபெற்றது. தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, மக்களின் வாழ்வாதாரத்தை இழந்து வெளியேற்றப்பட்ட அனைத்து ரயில் நிலைய மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு தகுந்த இழப்பீடும், முறையான மாற்று ஏற்பாடுகளும் (மறுவாழ்வு) செய்து தருவது ஆகியவையே இப்போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன. இந்த பேரணியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மேற்கு வங்க மாநில செயலாளருமான முகமது சலீம், மாநில செயற்குழு உறுப்பினர் பலாஷ் தாஸ், மாநிலக் குழு உறுப்பினர் கார்கி சாட்டர்ஜி மற்றும் சிபிஐ, ஆர்எஸ்பி, பார்வர்டு பிளாக், சிபிஐ(எம்எல்) ஆகிய இடதுசாரிகளின் கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.</p>
