முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

9 May 2026, 9:34 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

மேற்கு வங்கத்தில் ஹிஜாப் வன்முறையை தொடங்கிய பாஜக

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைபற்றி யுள்ளது. சனியன்று பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி முதலமைச்ச ராக பொறுப்பேற்றார். இந்நிலையில், வெற்றி பெற்ற 5 நாட்க ளிலேயே மேற்கு வங்கத்தில் பாஜக ஹிஜாப் வன்முறையை தொடங்கியுள் ளது. ஹவுரா மாவட்டம் டோம்ஜூரில் உள்ள ஆசாத் ஹிந்த் கல்லூரிக்கு வெளியே, மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட் டுள்ளது. குறிப்பாக போராட்டத்தின் போது “இது மதரஸா அல்ல” என்று இந்துத்துவா கும்பல் கோஷமிட்டு மிரட்டியுள்ளது. இத னால் டோம்ஜூரில் பதற்றமான சூழல் உரு வாகியுள்ளது.

கேரள கருவூலத்தில் ரூ.6,000 கோடி நிதிநிலை பிரச்சனை இல்லை. கேரள கருவூலத்தில் ரூ.6,000 கோடி

உள்ளது என சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினரும், கொட்டாரக்கரா எம்எல்ஏ வுமான கே.என்.பாலகோபால் கூறி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில்,“இடதுமுன்னணி ஆட்சியால் கேரளத்தில் நிதிநிலை தற்போது மிகவும் சீராகவும், வசதியான நிலையிலும் உள்ளது. மாநிலத்தின் வருவாய், நிதிப் பற்றாக்குறை, கடன் அளவு போன்ற நிதி குறிகாட்டிகளே இதற்குச் சான்றாக உள்ளன. தற்போது கருவூலத்தில் தோரா யமாக ரூ.6,000 கோடி ரொக்க இருப்பு உள்ளது. அதனால் கருவூல நிதிநிலை யில் எந்த சிக்கலும் இல்லை” என அவர் கூறினார். கே.என்.பாலகோபால் பினராயி விஜயன் 2.0 அரசில் நிதிய மைச்சராக பணியாற்றினார்.

Share
FacebookXWhatsAppTelegram